லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம்
கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம் அல்லது லெம்பா சுபாங் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Lembah Subang LRT Station; மலாய்: Stesen LRT Lembah Subang; சீனம்: 梳邦谷) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த நிலையம் லெம்பா சுபாங் பராமரிப்பு கிடங்கிற்கு (Lembah Subang Depot) அருகில் அமைந்துள்ளது.[3]
Remove ads
அமைவு
கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது.
லெம்பா சுபாங் பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், சுபாங் எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.
காத்திருக்கும் நேரம்
PJU 1A/46 சாலை; PJU 1A சாலை, ஆரா டாமன்சாரா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
2019-ஆம் ஆண்டில், ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே உச்ச நேர தொடருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 1.5 நிமிடங்களுக்கு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது.
Remove ads
லெம்பா சுபாங் பராமரிப்புக் கிடங்கு
லெம்பா சுபாங் நிலையம், லெம்பா சுபாங் பராமரிப்புக் கிடங்கிற்கு அருகில் உள்ளது. இந்தப் பராமரிப்புக் கிடங்கு கிளானா ஜெயா வழித்தடத்திற்குச் சேவை செய்யும் ஒரே நிலையக் கிடங்கு ஆகும்.
லெம்பா சுபாங் என்பது சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகருக்கு மேற்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்து இருக்கும் இந்த நகரம், சா ஆலாம், சுபாங் ஜெயா பெருநகரங்களுக்கு இடையிலும் அமைந்துள்ளது.[4]
சுபாங் வானூர்தி நிலையம்
லெம்பா சுபாங் நகரம் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கம்போங் பாரு சுபாங் சிற்றூரையும்; சௌஜானா குழிப்பந்து மன்றத்தையும் (Saujana Golf Country Club) அடக்கி உள்ளது.[5] சுபாங் ஜெயா, கிளானா ஜெயா (Kelana Jaya), சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா (Kwasa Damansara), கோத்தா டாமன்சாரா (Kota Damansara), ஆரா டாமன்சாரா (Ara Damansara), முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், இந்தச் சுபாங் நகரத்திற்கு மிக அருகில் உள்ளன.
இங்குதான் கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Subang International Airport) அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம், சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang Airport) என்றும் அழைக்கப்படுகிறது.
Remove ads
கிளானா ஜெயா வழித்தடம்
கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[6]
மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும்.
இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.
பேருந்து சேவைகள்
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
Remove ads
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads