வடக்கு கசக்கிசுத்தான் பிராந்தியம்

From Wikipedia, the free encyclopedia

வடக்கு கசக்கிசுத்தான் பிராந்தியம்map
Remove ads

வடக்கு கஜகஸ்தான் பிராந்தியம் (North Kazakhstan Region, காசாக்கு: Солтүстік Қазақстан облысы, romanized: Soltüstik Qazaqstan oblysy ) என்பது கஜகஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் பெட்ரோபாவ்ல் ஆகும், இந்த நகரத்தின் மக்கள் தொகை 193,300 என்றும், மாகாணத்தின் மக்கள் தொகை 558 700 என்றும் உள்ளது. இப்பிராந்தியம் வடக்கே உருசியாவை ( ஓம்ஸ்க் ஒப்லாஸ்ட், குர்கன் ஒப்லாஸ்ட் மற்றும் தியுமென் ஒப்லாஸ்ட் ) எல்லையாக கொண்டுள்ளது. பிற திசைசகளில் கஜகஸ்தானின் மூன்று பிராந்தியங்களை எல்லையாகக் கொண்டுள்ளது: இதன் தெற்கே அக்மோலா பிராந்தியமும், கிழக்கில் பாவ்லோடர் பிராந்தியமும், மேற்கில் கொஸ்தானே பிராந்தியத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இப்பிராந்தியபத்தின் பரப்பளவு 98,040 km2 (37,850 sq mi) ஆகும், இது கஜகஸ்தானின் பிராந்தியங்களில் நான்காவது சிறிய பிராந்தியம் ஆகும். இர்டிஷ் ஆற்றின் துணை ஆறான இஷிம் (எசில்) ஆறு கராகண்டி பிராந்தியத்திலிருந்து உருசியாவுக்கு வடக்கு கஜகஸ்தான் பிராந்தியம் வழியாக பாய்கிறது.

விரைவான உண்மைகள் வடக்கு கஜகஸ்தான் பிராந்தியம் Soltüstik Qazaqstan oblysyСолтүстік Қазақстан облысы, நாடு ...
Remove ads

மக்கள் வகைப்பாடு

Thumb
The share of the European population by districts and cities of regional and republican subordination Kazakhstan in 2016
  > 70٪
  60.0 – 69.9 %
  50.0 - 59.9 %
  40.0 - 49.9 %
  30.0 - 39.9 %
  20.0 - 29.9 %
  10.0 - 19.9 %
  0.0 - 9.9 %
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மக்கள் தொகை ...

தேசிய கட்டமைப்பானது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையில் கணிசமாக வேறுபடுகிறது. நகர்ப்புறமான பெட்ரோபாவ்லோவ்ஸ்கின் மக்கள் தொகையில் உருசியர்கள் 60.40% ஆகவும், உலிஹானோவ்ஸ்கியில், கசாக் மக்கள் தொகையானது 86.04% ஆகவும் உள்ளது. கஜகஸ்தானில் இப்பகுதியில் தான் போலந்து மக்கள் பெருமளவு வாழ்கின்றனர்.

இனக்குழுக்கள் (2020): [5]

  • உருசியர்கள் : 49.35%
  • கசக்குகள் : 35.29%
  • உக்ரேனியர் : 4.06%
  • ஜெர்மானியர் : 3.55%
  • தாதர் : 2.17%
  • மற்றவர்: 5.58%

மேலும், வடக்கு கஜகஸ்தான் பகுதி கஜகஸ்தானில் ஒரு தனித்துவமான பகுதியாக உள்ளது. இப்பிராந்தியத்தின் மக்கள்தொகையில் இயற்கையான சரிவு ஏற்பட்டு வந்த‍து. என்றாலும், 2008 முதல், இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி இருந்ததுவருகிறது.

Remove ads

நிர்வாக பிரிவுகள்

இப்பகுதி நிர்வாக ரீதியாக பதின்மூன்று மாவட்டங்களாகவும் பெட்ரோபாவ்ல் நகரமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. [6]

  1. அக்காயின் மாவட்டம்
  2. அக்ஷர் மாவட்டம்
  3. அயர்டாவ் மாவட்டம்
  4. எஸில் மாவட்டம்
  5. காபிட் முசிரெபோவ் மாவட்டம்
  6. கைசில்ஜார் மாவட்டம்
  7. மக்ஷான் ஜுமாபேவ் மாவட்டம்
  8. மம்லியுட் மாவட்டம்
  9. ஷால் அகின் மாவட்டம்
  10. தைன்ஷா மாவட்டம்
  11. திமிரியாசேவ் மாவட்டம்
  12. உலிகனோவ் மாவட்டம்
  13. ஜாம்பில் மாவட்டம்

வடக்கு கஜகஸ்தான் பிராந்தியத்தில் பின்வரும் ஐந்து வட்டாரங்கள் நகர அந்தஸ்தைக் கொண்டுள்ளன. [6] அவை பெட்ரோபாவ்ல், புலாயெவோ, மம்லியுட்கா, செர்ஜியேவ்கா, தைன்ஷா என்பனவாகும்.

Remove ads

விளையாட்டு

இப்பிராந்தியத்தின் பாண்டி அணி 2016 இல் நடந்த தேசிய வாகையர்சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றது.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads