வர்தகு மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

வர்தகு மாகாணம்map
Remove ads

வர்தகு மாகாணம் (Wardag Province (பஷ்தூ: د وردگ ولايت, Persian: ولایت وردک), also called Wardag or simply Wardak Province) என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள முப்பத்து நான்கு மாகாணங்களில் ஒன்று. இந்த மாகாணமானது நாட்டின் மையப்பகுதியில் உள்ளது. இது எட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையானது 567,600 ஆகும். மாகாணத்தின் தலைநகரம் மைதான் ஷார் ஆகும், மாகாணத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் சயாபாத் மாவட்டம். மாகாணத்தின் பெயர் ஆப்கான் அரசியலமைப்பிலும் ஐடிஎல்ஜி ஒப்புதல் பெற்ற ஆவணங்களின்படியும் வாடக் என்று மட்டுமே உள்ளது.

விரைவான உண்மைகள் வர்தகுWardag وردګ, நாடு ...
Remove ads

வரலாறு

பொதுவுடமைக் காலத்தில், வர்தகு மக்கள் பொதுவுடமை அரசாங்கத்திற்கு கணிசமான ஆதரவை வழங்கவில்லை.[2] ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போரின்போது வடக் மாகாணம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது, இது காபூலுடனும் அதன் விவசாய நிலங்களுக்கும் அருகாமையில் இருந்தது. உள்நாட்டுப் போர் காலத்தில் 1995ஆம் ஆண்டு குளிர்காலத்தில் மாகாணத்தின் பெரும்பகுதிதலிபானால் கைப்பற்றப்பட்டது.[2]

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மைதான் வாடக் பகுதியின் பாதுகாப்பு நிலைமை சீர்குலைந்தது. முகமது ஓஸ்மான் தாரிக் எலியாஸ் எழுதிய ஒரு செய்தியின்படி, 2008ஆம் ஆண்டின் இறுதியில் லோகர் மற்றும் வாடக் ஆகிய இரண்டு பகுதிகளும் தலிபான் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. ஆப்கானித்தான் உள்துறை அமைச்சகமானது 2009 ஏப்ரலில், முழு மாகாணத்தையும் "இடர் மிகு" பகுதியாக பட்டியலிட்டது.[3]

Remove ads

நிலவியல்

வாடக் மாகாணமானது ஆப்கானிஸ்தானின் நடு மற்றும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் பர்வனா மாகணமும், கிழக்கே காபுல் மாகாணம் லோகார் மாகாணம், தெற்கே கஜினி மாகாணம், மேற்கில் பாமியான் மாகாணம் போன்றவை உள்ளன. வாடக் மாகாணத்தின் தலைநகரமான மைதான் ஷார் நகரானது காபூலில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. வாடக் மாகாணத்தின் பரப்பளவு 9,934 கி.மீ.2 ஆகும். பெரும்பாலான மக்கள் கிராமப்புற பகுதிகளில் வாழ்கின்றனர். காபூல்-காந்தார நெடுஞ்சாலையில் மிகவும் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகள் உள்ளன. மாகாணத்தின் மீதமுள்ள பகுதிகளானது மக்களடர்த்தி குறைந்த பகுதியாகும். மாகாணத்தில் புகழ்பெற்ற கணவாய்களாக யுனை கணவாய், ஹஜிகாக் கணவாய் போன்றவை உள்ளன.

Remove ads

அரசியலும், நிர்வாகமும்

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் முகம்மது ஹலிம் ஃபிடாய் ஆவார். இவருக்கு முன்னதாக அப்துல்ஜப்பார் நயீமி என்பவர் இருந்தார். மாகாணத்தின் தலைநகரமாக மைதான் ஷார் நகரம் செயல்படுகிறது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) உடன் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) ஆகிய கையாள்கின்றன. மாகாண காவல்துறைத் தலைவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

கல்வி

Thumb
2009 ஆம் ஆண்டில் வாடக் மாகாணத்தின் ஜல்ரே மாவட்டத்தில் ஒரு பள்ளி புதுப்பிக்கப்பட்டது

வாடக் மாகாணத்தில் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் 25% ஆகும். மாகாணத்தில் சுமார் 251 துவக்க மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இப்பளிகளில் 105,358 மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளிகளில் 2909 ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.[4]

மக்கள்வைப்பாடு

Thumb
வாடக் மாகாண மாவட்டங்கள்

2013 ஆண்டின்படி மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 567,600 ஆகும்.[1] இது பெரும்பாலும் பழங்குடி மற்றும் கிராமப்புற மக்களைக் கொண்ட மாகாணமாகும். இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார் நிறுவனத்தின் ஆய்வின்படி மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பஷ்தூன் மக்கள், கசாரா மக்கள், தாஜிக் இன மக்கள் உள்ளனர். மாகாணத்தின் வட மாவட்டங்களில் தாஜிக் மக்கள் முதன்மையாக வாழ்கின்றனர், அதே சமயம் கசாரா மக்கள் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் வசிக்கின்றனர். மேதியன் வார்டுக் என்னும் சியா இஸ்லாம்களைப் பின்பற்றும் பழங்குடியின மக்கள் சிறிய எண்ணிக்கையில் குய்ஸில்பாஷ் பகுதியில் வாழ்கின்றனர். பஷ்டூன் பழங்குடியினரில் குல்சாய் (ஹொடாக் மற்றும் கரோடி வம்சங்கள்) மற்றும் வார்டுக் ஆகிய மக்கள் வாழ்கின்றனர்.[5][6]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads