வி. எம். சத்திரம்

From Wikipedia, the free encyclopedia

வி. எம். சத்திரம்map
Remove ads

வி. எம். சத்திரம் (V. M. Chatram) அல்லது வி.மு. சத்திரம் என்பது விசயராகவ முதலியார் சத்திரம் என்பதாகும். இது தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள வேகமாக வளர்ந்துவரும் நகர்ப்பகுதியாகும். முன்பு கிராம ஊராட்சியாக இருந்த வி. எம். சத்திரம் 1994 சூன் 1 முதல் திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு வார்டாக மேம்பாடடைந்தது.[4] வேகமாக நகர்பகுதியாக மாறிவரும், வி. எம். சத்திரத்துடன் இணைந்த/அருகில் உள்ள நகர்களாக வ.வு.சி. நகர், ஸ்ரீனிவாசகம் நகர், ஆதித்தனார் நகர், டி. வி. எஸ் நகர் உள்ளன.[5]

விரைவான உண்மைகள்
Remove ads

பள்ளிகள்

வி. எம். சத்திரத்தில் அமைந்துள்ள பள்ளிகள்:[6]

  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
  • ஆர் சி தொடக்கப் பள்ளி, ஆரோக்கியநாதபுரம்
  • ரோசுமேரி மெட்ரிக் மேனிலைப் பள்ளி,
  • ஒயாசிஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளி, தூத்துக்குடி சாலை
  • தூய ஜோசப் உயர்நிலைப் பள்ளி, ஆரோக்கியநாதபுரம்
  • தூய அந்தோணியார் பொதுப் பள்ளி
  • ரோசுமேரி பொதுப் பள்ளி
  • மார்னிங் ஸ்டார் மழலையர் தொடக்கப்பள்ளி

வழிபாட்டுத் தலங்கள்

  • முப்பிடாதி அம்மன் கோயில்
  • தளவாய் மாடசாமி கோவில்
  • கரையடி சுடலைக் கோயில்
  • தடிவீர சுவாமி கோயில்
  • பத்திரகாளி அம்மன் கோயில்
  • இராமர் கோயில்
  • பிள்ளையார் கோயில்
  • ஆர். சி. தேவாலயம்

பொது நூலகம்

வி. எம். சத்திரத்தில் அரசு பொது நூலகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இது இங்குள்ள மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரிதும் உதவியாக உள்ளது. இந்நூலகத்தில் சார்பில் நூல்கள் குறித்து கருத்தரங்கம், விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.[7]

வங்கிகள்

தானியங்கி பணம் வழங்கும் மையம் (ஏடிஎம்)

  • இந்தியன் வங்கி
  • தமிழ்நாடு மெகண்டைல் வங்கி
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

குளங்கள்

வி. எம். சத்திரத்தின் நீராதரங்களாக நொச்சிக்குளம், மூர்த்திநயினார்குளம், பீர்க்கன்குளம் உள்ளன. இந்த குளங்கள் மூலம் சுமார் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் நீர்பாசன வசதி பெறுகின்றன. இங்கு கத்தரி, வெண்டை, தடியங்காய் உள்ளிட்டப் பூம்பயிர்களும், நெல், வாழை முதலிய பயிர்களும் பயிரிடப்படுகின்றன.[8]

திடக்கழிவு மேலாண்மை

Thumb

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டமான குப்பைகளை வீடுகளிலே உரமாக்கும் திட்டம் முதன் முதலாக வி. எம். சத்திரம் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி இப்பகுதியில் சுமார் 150 வீடுகளில் 5 அடி உயரமுள்ள பி.வி.சி குழாய் வீடுகளின் அருகில் புதைத்துவைக்கப்பட்டு, அதனுள் வீடுகளில் சேகரிக்கப்படும் கரிமக் கழிவுகளை நிரப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடப்படும் குப்பைகள் 45 நாட்களில் இயற்கை உரமாக மாறிவிடும்.[9]

Remove ads

குறுங்காடுகள்

வி.எம் சத்திரத்திலுள்ள மூர்த்திநயினார் குளம் அருகில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் குறுங்காடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மியாவாக்கி வகையைச் சார்ந்த இந்த குறுங்காட்டில் சுமார் 120 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இது வி.மு.சத்திரம் மேம்பாட்டு அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[10]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads