விண்ணைத்தாண்டி வருவாயா

கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

விண்ணைத்தாண்டி வருவாயா
Remove ads

விண்ணைத்தாண்டி வருவாயா 2010 ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்.[1] இத்திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் மேனன்.[2] சிலம்பரசன், த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் (இப்படத்திற்குப் பின் இவர் விடிவி கணேஷ் என்று அழைக்கப்படுகிறார்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3] 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.[4] இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.[5] 7 வருடங்களின் பின் கௌதம் மேனன் இத்திரைப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க உள்ளதாகவும், அதில் சிலம்பரசன் அடங்கலாக 6 நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறினார்.

விரைவான உண்மைகள் விண்ணைத்தாண்டி வருவாயா, இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிறிஸ்தவரான ஜெஸ்ஸிக்கும் இடையேயான காதல் அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகின்றது.[6]

நடிப்பு

Remove ads

பாடல்கள்

விரைவான உண்மைகள் விண்ணைத்தாண்டி வருவாயா, ஆல்பம் ஏ. ஆர். ரகுமான் ...

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பினில் ஏழு பாடல்கள் கொண்டுள்ளது.[8] இத்திரைப்படத்தின் உலகளாவிய இசை வெளியிட்டு விழா டிசம்பர் 19, 2009 அன்று லண்டனில் நடந்தது. அதன் பின் மீண்டுமொரு முறை சென்னையில் ஜனவரி 12, 2010 அன்று நடந்தது.

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர்கள் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads