வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)
பி. ஆர். பந்துலு இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman (film)) (1959) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில்[சான்று தேவை] ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி மற்றும் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் ஆவார்.[1]
இத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.[2]
Remove ads
வகை
நடிகர்கள்
- முதன்மை நடிகர்கள்[3]
- சிவாஜி கணேசன் - வீரபாண்டிய கட்டபொம்மன்
- ஜெமினி கணேசன் - வெள்ளையத்தேவன்
- பத்மினி - வெள்ளையம்மாள்
- எஸ். வரலட்சுமி - ஜக்கம்மாள்
- ராகினி - சுந்தரவடிவு
- துணை நடிகர்கள்[3]
- வி. கே. ராமசாமி - எட்டப்பன்
- ஓ. ஏ. கே. தேவர் - ஊமைத்துரை
- ஜாவர் சீதாராமன் - பேனர் மேன்
- ஏ. கருணாநிதி - சுந்தரலிங்கம்
- எம். ஆர். சந்தானம் - தளபதி சிவசுப்பிரமணியம்
- சி. ஆர். பார்த்திபன் - ஜாக்சன் துரை
- எஸ். ஏ. கண்ணன் - கேப்டன் டேவிசன்
- குழந்தை காஞ்சனா - மீனா
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads