ஹும்லா மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

ஹும்லா மாவட்டம்map
Remove ads

ஹும்லா மாவட்டம் (Humla District) (நேபாளி: हुम्ला जिल्लाHumla.ogg, மத்திய மேற்கு நேபாளத்தின் மாநில எண் 6–இல் அமைந்த, நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சிமிகோட் நகரம் ஆகும். இம்மாவட்டம் 7 சிமிகோட், நம்கா, கர்புநாத், சர்கேகத், சான்கேலி, அதன்சுலி, தஜாகோட் எனும் 7 கிராமிய நகராட்சிக்களை கொண்டது. இம்மாவட்டம் நேபாள-திபெத் எல்லைப்புறத்தில் உள்ளது. இதனருகே திபெத் பகுதியில் கயிலை மலை உள்ளது.

விரைவான உண்மைகள் ஹும்லா மாவட்டம், நாடு ...
Thumb
நேபாளத்தில் ஹும்லா மாவட்டத்தின் அமைவிடம்

5,655 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹும்லா மாவட்டத்தின் மக்கள் தொகை 50,858 ஆகும்.[1] ஹும்லா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் திபெத்திய பௌத்தர்களும், தெற்குப் பகுதியில் இந்துக்களும் வாழ்கின்றனர்.

Remove ads

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

Thumb
ஹும்லா மாவட்டத் தலைமையிடம் சிமிகோட்

இமயமலையில் அமைந்த இம்மாவட்டத்தின் வடக்கில் அமைந்த திபெத் தன்னாட்சிப் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத் தலைமையிடமான சிமிகோட்டிலிருந்து, கயிலை மலைக்கு நடைபாதையாக செல்வதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும்.

மேலதிகத் தகவல்கள் நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம், உயரம் ...
Remove ads

மருத்துவ நலம்

  • மாவட்ட மருத்துவ மனை : 1
  • ஆரம்ப சுகாதார மையங்கள் : 0
  • மருத்துவ மையங்கள் : 10
  • துணை மருத்துவ மையங்கள் : 16
  • மருத்துவர்களின் எண்ணிக்கை: 3
  • செவிலியர்களின் எண்ணிக்கை: 35

இம்மாவட்ட மக்கள் அலோபதி மருத்து முறையை விட உள்ளூர் மருத்துவ சிகிச்சைகளையே பெரிதும் நாடுகின்றனர்.

சுற்றுலா

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம், மலையேற்ற பயிற்சிக்கு உகந்ததாக உள்ளது. சிமிகோட் வானூர்தி நிலையம், வெளி நாட்டு மலை ஏற்ற வீரர்களுக்கு உதவியாக உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads