ஹெர்குலியம்

From Wikipedia, the free encyclopedia

ஹெர்குலியம்map
Remove ads

ஹெர்குலியம் என்னும் நகரம் இத்தாலியின் தென் பகுதி கடற்கரையோரத்தில் அமைந்திருந்த நகரமாகும். இந்த நகரம் மவுண்ட் வசூவியஸ் என்ற எரிமலையின் நிழலில் அமைந்திருந்த பழைய ரோமப் பேரரசில் இணைந்திருந்த நகரமாகும். கி.பி 79ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மவுண்ட் வசூவியஸ் எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் அதன் அருகிலிருந்த பல இடங்கள் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டு அழிந்துவிட்டது. இதில் பொம்பெயி நகரம் மற்றும் ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் முக்கியமானவையாகும். தற்போது இந்த நகரம் அகழ்வாராய்வின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.உலகில் அழிந்து போன நகரங்களில் ஹெர்குலியம் நகரமும் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் ஹெர்குலியம் (Herculaneum), இருப்பிடம் ...

மவுண்ட் வெசுவியஸ் வெடிப்பில் ஏற்பட்ட அழிவின்போது ஏராளமான மக்களும் விலங்கினங்களும் புகை மூட்டத்தில் மாட்டிக்கொண்டனர். 1738ஆம் ஆண்டுவாக்கில் இந்த நகரம் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது அந்த இடத்தில் புதையுண்ட மக்கள் மற்றும் விலங்குகள் எலும்புக்கூடுகளாக மாறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த எலும்புக்கூடுகள் கல்லாக மாறியிருந்தன. இந்த இடத்தை உலக பாரம்பரிய சின்னமாக அந்த அரசு பாதுகாத்து வருகிறது.

Remove ads

வரலாறு

ஹெர்குலியம் என்ற நகரானது கிரேக்க தொன்மவியல் கணக்கின்படி ஹெர்குலஸ் (இலத்தீன்) என்ற கிரேக்க வீரரின் நினைவாக உருவானதாக கருதப்படுகிறது. இந்த நகரம் நேபிள்ஸ் வளைகுடாவின் அருகில் கிரேக்கப்பகுதியில் அமைந்திருந்தது. 6ஆம் நூற்றாண்டு காலத்தில் இங்கு பல குழுக்களாகப் பழங்குடிமக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பின்னர் 89ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சமூக போர் (90-88 கி.மு.) காரணமாக இத்தாலியின் வசம் வந்துள்ளது.

இந்த நகரம் கி.பி 79ஆம் நூற்றாண்டுவாக்கில் மவுண்ட் வசூவியஸ் எரிமலையின் வெடிப்பின் காரணமாக 20 மீட்டர்கள் வரை புதையுண்டது. அதன் பின்னர் 1700ஆம் ஆண்டு இளவரசர் டி எல்ஃபெப் (d'Elbeuf's) என்பவரால் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிடப்பட்டது.

Remove ads

அமைவிடம்

இந்த நகரம் இத்தாலி நாட்டின் தென் பகுதியில் நேபிள்ஸ் வளைகுடாவிற்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது. இப்பகுதி ஒருபுறம் ஏட்ரியாட்டிக் கடலையும், மறுபுறம் திர்ரேனியக் கடலையும் அரணாக கொண்டு அமைந்துள்ள இத்தாலி நாட்டில் உள்ளது.

கி.பி. 79ஆம் ஆண்டின் வெடிப்பு

Thumb
மவுண்ட் வெசுவியஸ் வெடிப்பின் போது ஹெர்குலியம், பொம்பெயி போன்ற நகரங்களின் மேல் சாம்பல் பரவும் காட்சி. இது கடற்கரையோரம் காணப்படுகிறது

கி.பி.79ஆம் ஆண்டு 24ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் வரை மவுண்ட் வெசுவியஸ் எரிமலை 800 ஆண்டுகளாகத் தூங்கிக்கொண்டு இருந்ததால் அது எரிமலை என்று அறியப்படாதிருந்தது.[1]

அகழ்வாய்வு

Thumb
எலும்புக்கூடுகள் காணப்படாத படகு வீடு

இந்த ஆராய்ச்சி புவியியல் கழகத்தின் நிதியுதவியின் மூலம் நடந்தது. 1981ஆம் ஆண்டு டாக்டர் கேசுபர் (Giuseppe) வழிகாட்டலின் மூலம் இத்தாலிய பொதுப்பணி ஊழியர்கள் அந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தார்கள். அப்போது அங்கு எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தர்கள்.

ஆவணப்படங்கள்

Remove ads

மேற்கோள்கள்

வெளி ஆதாரம்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads