From Wikipedia, the free encyclopedia
காரிமங்கலம் (Karimangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் வட்டம் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். காரிமங்கலம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
காரிமங்கலம் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
வட்டம் | காரிமங்கலம் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கி.சாந்தி, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
13,511 (2011[update]) • 3,860/km2 (9,997/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 3.5 சதுர கிலோமீட்டர்கள் (1.4 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/karimangalam |
இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 22 கிமீ; வடக்கில் கிருஷ்ணகிரி 24 கிமீ; கிழக்கில் அரூர் 65 கிமீ; மேற்கில்பாலக்கோடு 18 கிமீ மாரண்டஹள்ளி 24 கி.மீ தொலைவில் உள்ளது.
3.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 69 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,398 வீடுகளும், 13,511 மக்கள்தொகையும் கொண்டது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.