பிரித்தானிய அரசியல்வாதி, வரலாற்றாளர், இதழியளார் From Wikipedia, the free encyclopedia
அலெக்சாண்டர் போரிசு டி பெஃபெல் சான்சன் (Alexander Boris de Pfeffel Johnson; பிறப்பு: 19 சூன் 1964) பிரித்தானிய அரசியல்வாதியும், வரலாற்றாளரும், முன்னாள் இதழியளாரும் ஆவார். இவர் 24 சூலை 2019 முதல் 6 செப்டம்பர் 2022 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும், மற்றும் 23 சூலை 2019 முதல் 5 செப்டம்பர் 2022 பழமைவாதக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் 2001 முதல் 2008 வரையிலும், பின்னர் 2015 முதலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2008 முதல் 2016 வரை இலண்டன் நகர முதல்வராகவும், 2016 முதல் 2018 வரை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[6]
போரிசு சான்சன் Boris Johnson | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் 24 சூலை 2019 – 6 செப்டம்பர் 2022 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
முன்னையவர் | தெரசா மே |
பின்னவர் | லிஸ் டிரஸ் |
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் | |
பதவியில் 23 சூலை 2019 – 5 செப்டம்பர் 2022 | |
முன்னையவர் | தெரசா மே |
பின்னவர் | லிஸ் டிரஸ் |
பொதுநலவாயங்களின் தலைமைப் பொறுப்பு | |
பதவியில் 24 சூலை 2019 – 24 சூன் 2022 | |
தலைவர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
முன்னையவர் | தெரசா மே |
பின்னவர் | பால் ககாமே |
வெளியுறவுத் துறை மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர் | |
பதவியில் 13 சூலை 2016 – 9 சூலை 2018 | |
பிரதமர் | தெரசா மே |
முன்னையவர் | பிலிப் ஆமண்டு |
பின்னவர் | செரமி கண்ட் |
இலண்டன் நகர முதல்வர் | |
பதவியில் 4 மே 2008 – 9 மே 2016 | |
முன்னையவர் | கென் லிவிங்சுடன் |
பின்னவர் | சாதிக் கான் |
உக்சுபிர்ட்ச், தெற்கு ரூயிசிலிப் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2015 | |
முன்னையவர் | யோன் ராண்டல் |
பெரும்பான்மை | 7,210 (15.0%)[1] |
கென்லி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 9 சூன் 2001 – 4 சூன் 2008 | |
முன்னையவர் | மைக்கேல் எசல்டைன் |
பின்னவர் | யோன் கோவெல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அலெக்சாந்தர் போரிசு டி பெஃபெல் யோன்சன் 19 சூன் 1964 நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை |
|
அரசியல் கட்சி | கன்சர்வேட்டிவ் கட்சி |
துணைவர்(கள்) | அலேக்ரா மொசுடின்-ஓவென் (தி. 1987; ம.மு. 1993) மரீனா வீலர் (தி. 1993; வில. 2018) |
துணை | காரி சிமன்ட்சு (2018–இன்று)[3] |
பிள்ளைகள் | குறைந்தது 5 பேர்[4][5] |
பெற்றோர் |
|
வாழிடம் | 10 டவுனிங் தெரு |
கல்வி | ஈட்டன் கல்லூரி |
முன்னாள் கல்லூரி | பேலியல் கல்லூரி, ஆக்சுபோர்டு |
கையெழுத்து | |
இணையத்தளம் | காமன்சு இணையதளம் |
அமெரிக்காவில் நியூயார்க்கு நகரில் பிரித்தானியப் பெற்றோருக்குப் பிறந்த போரிசு சான்சன்,[7][8] பிரசெல்சு ஐரோப்பியக் கல்லூரி, ஈட்டன் கல்லூரி ஆகியவற்றிலும், ஆக்சுபோர்டு பெலியல் கல்லூரியிலும் கல்விகற்றார்.[9] தி டைமுசு நாளிதழில் ஊடகவியலாலராகத் தனது பணியை ஆரம்பித்தார். மேற்கோள் ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியமைக்காக அவர் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், த டெயிலி டெலிகிராப் பத்திரிகையின் பிரசெல்சு நிருபராகவும், பின்னர் 1994 முதல் 1999 வரை டெய்லி டெலிகிராஃப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.[10] 2001 இல் என்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அன்றைய பழமைவாதக் கட்சித் தலைவர்களான மைக்கேல் அவார்டு, டேவிட் கேமரன் ஆகியோரின் கீழ் நிழல் அமைச்சராக இருந்தார். 2008 இல் இவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, அதே ஆண்டில் இலண்டன் நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11] 2012 இல் மீண்டும் இலண்டன் நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவரது பதவிக்காலத்தில், பெரும்பாலான இலண்டன் பொதுப் போக்குவரத்துகளில் ஆல்ககோல் பயன்பாட்டைத் தடை செய்தார். இவரது காலத்தில் இலண்டனில் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
சான்சன் 2015 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2016 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற "பிரெக்சிட்" இயக்கப் பரப்புரையில் முக்கிய பங்காற்ற ஆரம்பித்தார்.[12] தெரசா மேயின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். பிரெக்சிட் தொடர்பாக தெரேசா மேயின் அணுகுமுறையை விமரிசித்து அப்பதவியில் இருந்து 2018 ஆம் ஆண்டில் விலகினார். 2019 ஆம் ஆண்டில் தெரேசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, சான்சன் கட்சித் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு,[13] பிரதமராக நியமிக்கப்பட்டார். 2019 திசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், சான்சன் தலைமையிலான பழமைவாதக் கட்சி வெற்றி பெற்றது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பழமைவாதக் கட்சி பெற்ற மிகப்பெரும் வெற்றியாக இத்தேர்தல் கணிக்கப்பட்டது.[14]
சான்சன் பிரித்தானிய அரசியல் மற்றும் ஊடகத்துறையில் ஒரு சர்ச்சைக்குரிய நபராகக் கருதப்படுகிறார். பாரம்பரிய பழமைவாதக் கட்சி அரசியலைத் தாண்டி, இவரை ஒரு பொழுதுபோக்காளர், நகைச்சுவையாளர், மற்றும் பிரபலமான நபராக மக்கள் புகழ்ந்துரைத்துள்ளனர். இவரை ஒரு மேட்டிமைவாதியாகவும், இனவெறி, பாலியல் மற்றும் ஓரினச்சேர்க்கை மொழிகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்.
உலகம் முழுவதும் தீவிரமாக பரவிக்கொண்டுள்ள கோவிட்-19 கொரோனா தீநுண்மியால் மார்ச்சு 27, 2020 அன்று தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டுள்ளதாகவும் காணொளி மூலம் வெளியிட்டார் [15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.