மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
1896-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில் தீபகற்ப மலேசியாவின் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பக / From Wikipedia, the free encyclopedia
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (ஆங்கிலம்: Federated Malay States (FMS); மலாய் மொழி: Negeri-negeri Melayu Bersekutu; சீனம்: 马来联邦; ஜாவி:نݢري٢ ملايو برسکوتو) என்பது 1896-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில், தீபகற்ப மலேசியாவின் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பகாங் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். அந்த நான்கு மாநிலங்களும் பிரித்தானிய மலாயா நிர்வாகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தன.
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் Federated Malay States | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1895–1942 1945–1946 | |||||||||||||||||||
குறிக்கோள்: கடவுளின் பாதுகாப்பின் கீழ் Dipelihara Allah Under God's Protection | |||||||||||||||||||
நிலை | ஐக்கிய இராச்சியத்தின் காப்பரசு | ||||||||||||||||||
தலைநகரம் | கோலாலம்பூர்1 | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||||||||||
அரசி | |||||||||||||||||||
• 1895–1901 (முதல்) | விக்டோரியா | ||||||||||||||||||
• 1936–1946 (கடைசி) | ஜோர்ஜ் VI | ||||||||||||||||||
தலைமை ஆளுநர் (Resident General) | |||||||||||||||||||
• 1896–1901 (முதல்) | பிராங்க் சுவெட்டன்காம் (Frank Swettenham) | ||||||||||||||||||
• 1939-1942 (கடைசி) | இயூ பிரேசர் (Hugh Fraser) | ||||||||||||||||||
சட்டமன்றம் | கூட்டரசு சட்டமன்றம் (Federal Legislative Council) | ||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிரித்தானிய பேரரசு | ||||||||||||||||||
• கூட்டமைப்பு | 1895 | ||||||||||||||||||
• கூட்டமைப்பு உடன்படிக்கை | 1 சூலை 1896 | ||||||||||||||||||
1942 | |||||||||||||||||||
• ஜப்பானியர் சரண் | 15 ஆகஸ்டு 1945 | ||||||||||||||||||
• மலாயா ஒன்றியம் | 31 மார்ச் 1946 | ||||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||||
• 1933[1] | 1,597,700 | ||||||||||||||||||
நாணயம் | நீரிணை டாலர் 1939 வரை (Straits Dollar) மலாயா டாலர் 1953 வரை (Malayan Dollar) 1953 | ||||||||||||||||||
| |||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | மலேசியா | ||||||||||||||||||
1 Also the state capital of Selangor ² Malay using Jawi (Arabic) script ³ Later Chief Secretaries to the Government and Federal Secretaries |
1946-ஆம் ஆண்டில், அந்த நான்கு மாநிலங்களுடன், மலாக்கா; பினாங்கு நீரிணை குடியேற்ற மாநிலங்களும் (Straits Settlements); மற்றும் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்களும் (Unfederated Malay States) ஒன்றாக இணைக்கப்பட்டு மலாயா ஒன்றியம் (Malayan Union) எனும் ஓர் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மலாயா ஒன்றியம் எனும் அந்த அமைப்பு மலாயா கூட்டமைப்பு ஆனது. 1957-ஆம் ஆண்டில் மலாயா சுதந்திரம் அடைந்தது. இறுதியாக 1963-ஆம் ஆண்டில், வடக்கு போர்னியோ எனும் இன்றைய சபா மாநிலமும் சரவாக்; சிங்கப்பூர் மாநிலங்களும் இணைந்து மலேசியா எனும் பெரும் கூட்டமைப்பாக மாற்றம் கண்டன.