தாவரம் (Plant) (தாவரவியல் பெயர்: Plantae) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (ferns), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, பிரிவுகள் ...
தாவரம்
புதைப்படிவ காலம்:520 Ma
PreЄ
Pg
N
கேம்பிரியக் காலம் முதல், but #Fossils
Thumb
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
தரப்படுத்தப்படாத:
ஆர்க்கிபிளாசுட்டிடா
திணை:
தாவரம்

ஈக்கெல், 1866[1]
பிரிவுகள்

பச்சை அல்கா

  • குளோரோபைட்டா
  • கரோபைட்டா

நிலத் தாவரங்கள் (embryophytes)

  • Non-vascular land plants (bryophytes)
    • மார்கன்டியோபைட்டா—liverworts
    • அந்தோசெரோட்டோபைட்டா
    • பிரயோபைட்டா - பாசி
    • Horneophytopsida
  • கலன்றாவரம்s (டிரக்கியோபைட்சு)
    • ரைனியோபைட்டா—rhyniophytes
    • சோஸ்டரோபைலோபைட்டா—zosterophylls
    • Lycopodiophyta—clubmosses
    • டிரைமெரோபைட்டோபைட்டா—trimerophytes
    • டெரிடோபைட்டா—ferns and horsetails
    • புரோசிம்னோசுபேர்மோபைட்டா
    • வித்துத் தாவரங்கள் (spermatophytes)
      • டெரிடோஸ்பேமட்டோபைட்டா—வித்துப் பன்னங்கள்
      • பினோபைட்டா—ஊசியிலைத் தாவரங்கள்
      • சைக்காட்டுஆபைட்டா—cycads
      • Ginkgophyta—ginkgo
      • Gnetophyta—gnetae
      • Magnoliophyta—flowering plants

Nematophytes

மூடு

பயன்கள்

இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 மீட்டர் (330 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளன. இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் ஆகியவை கிடைக்கிறன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது.

மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்சிசன் பெருகப் பெருக விலங்குகள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்றத் துவங்கின. தாவரங்களால் மண்சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான தட்பவெப்பநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன.

வரைவிலக்கணம்

தமிழக அசையும் தளிர்
Thumb
மரமும், கொடியும், கேரளம்
  • கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்(384 கி.மு. – 322 கி.மு.) எல்லா உயிரினங்களையும், தாவரங்கள் (நிலைத்திணை), விலங்குகள் (நகர்திணை) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார்.
  • 18 ஆம் நூற்றாண்டில் லின்னேயசின் முறைப்படி(Linnaeus' system), இவை வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு இராச்சியங்கள் (Kingdoms) ஆகின. வெஜிட்டபிலியா இராச்சியம் பின்னர் பிளாண்ட்டே (Plantae) என அழைக்கப்பட்டது.
  • காலப்போக்கில் பிளாண்ட்டே இராச்சியத்தில் ஆரம்பத்தில் அடக்கப்பட்ட பல வகைகள் தொடர்பற்றவையாக இருப்பது அறியப்பட்டது. பூஞ்சணங்களும், பல வகை பாசிகளும் (அல்காக்கள்) வெவ்வேறு இராச்சியப் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இருந்தாலும் இவை பல சூழ்நிலைகளில், தாவரங்களாகவே இன்றளவும் கருதப்பட்டு வருகின்றன.

கருத்துருக்கள்

தாவரங்கள் என்று கூறும்போது அவை பின்வரும் மூன்று கருத்துருக்களில் ஒன்றால் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன:

  • நிலத் தாவரங்கள்: இவை எம்பிரையோபைட்டா, மீட்டாபைட்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
  • பச்சைத் தாவரங்கள்: இதற்கு விரிடிபைட்டா, குளோரோபினாட்டா போன்ற பெயர்களும் உண்டு. இதற்குள் முன்னர் குறிப்பிட்ட நிலத்தாவரங்களும் அடங்குகின்றன. அவற்றுடன், கரோபைட்டா, குளோரோபைட்டா என்பனவும் அடங்கும்.
  • ஆர்க்கீபிளாஸ்டிடா: பிளாஸ்டிடா, பிரிமோபிளாண்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இதற்குள் பச்சைத் தாவரங்கள் அனைத்தும் அடங்குவதுடன் ரொடோபைட்டா, குளுக்கோபைட்டா என்பனவும் அடங்குகின்றன.

தாவர வகைப்பாடு

  • உயிரியல் வகைப்பாட்டின்படி, தொடக்ககால வகைப்பாட்டியலாளர்கள் தாவரங்களின் வெளிப்புற உடற் பண்புகளுக்கு அதிக முன்னுரிமைக் கொடுத்தனர். அதன் பின்பு வந்த அறிஞர்கள்(குறிப்பாக லின்னேயஸ் ) தாவரங்களின் மலர் பண்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், மலரின் பண்புகள் மாறுபடாமல் நிலைப்புத் தன்மையுடனும், நிரந்தரமாகவும் இருக்கின்றன. மேலும் பூக்கும் தாவரங்களை ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் என்று இரு வகையாகவே பிரித்திருந்தனர்.
  • தொடக்ககால பல்வேறு விதமான வகைப்பாடுகள், மூன்று முறைகளில் பிரிக்கப்பட்டன.
  1. செயற்கை முறை - (எ.கா) லின்னேயஸ் முறை-7300 சிற்றினங்களுடன் விவரித்தார்.
  2. இயற்கை முறை - (எ.கா) பெந்தம்-கூக்கர் வகைப்பாடு
  3. மரபுவழி முறை - (எ.கா) அடால்ஃப் எங்ளர்(1844-1930), கார்ல் பிராண்டல்(1849-1893) இருவரும் கூறினர்.

பெயரிடல்

தாவரங்களுக்கான பெயரிடல், கீழ்கண்ட அமைப்புகளால் கட்டுப்படுத்தப் படுகிறது.

  • தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (International Code of Botanical Nomenclature),
  • வளர்க்கும் தாவரங்களுக்கான அனைத்துலகப் பெயரிடல் நெறிமுறை (International Code of Nomenclature for Cultivated Plants)
  • தற்காலத்தில் 2009 ஆம் ஆண்டின் பூக்குந்தாவரக் கூர்ப்பொழுங்குக் குழு III முறை (APG III system - Angiosperm Phylogeny Group III system) என்பதன் படி, இவை எட்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அவைபின்வருமாறு;-
  1. அம்பொரெல்லா (Amborella)
  2. அல்லியம் (Nymphaeales)
  3. அவுத்திரோபியன் (Austrobaileyales)
  4. பசியவணி (Chloranthales)
  5. மூவடுக்கிதழிகள் (Magnoliidae)
  6. ஒருவித்திலையிகள் (Monocotyledonae)
  7. மூலிகைக்கொம்புகள் (Ceratophyllum)
  8. மெய்யிருவித்திலையிகள் (Eudicotyledonae)

பல்வகைமை

Thumb
மாடியில் வளரும் ஆல்
மேலதிகத் தகவல்கள் முறைசாராக் குழுக்கள், பிரிவுப் பெயர் ...
வாழும் தாவரப் பிரிவுகளின் பல்வகைமை
முறைசாராக் குழுக்கள் பிரிவுப் பெயர் பொதுப் பெயர் வாழும் இனங்களின்
எண்ணிக்கை
பச்சை அல்கா குளோரோபைட்டா பச்சை அல்கா (chlorophytes) 3,800 [2]
கரோபைட்டா green algae (desmids & charophytes) 4,000 - 6,000 [3]
பிரையோபைட்டீக்கள் மார்க்கான்டியோபைட்டா ஈரலுருத் தாவரங்கள் 6,000 - 8,000 [4]
அந்தோசெரோபைட்டா கொம்புருத் தாவரங்கள் 100 - 200 [5]
பிரையோபைட்டா mosses 12,000 [6]
தெரிடோபைட்டீக்கள் லைக்கோபோடியோபைட்டா club mosses 1,200 [7]
தெரிடோபைட்டா ferns, whisk ferns & horsetails 11,000 [7]
வித்துத் தாவரங்கள் சைக்காடோபைட்டா cycads 160 [8]
ஜிங்கோபைட்டா ஜிங்கோ 1 [9]
பினோபைட்டா ஊசியிலைத் தாவரங்கள் 630 [7]
கினெட்டோபைட்டா கினெட்டோபைட்டுகள் 70 [7]
மக்னோலியோபைட்டா பூக்கும் தாவரங்கள் 258,650 [10]
மூடு

தாவரக் கலம்

தாவரக் கலங்கள் கரு உள்ள கலங்களாகும். இவற்றில் ஒளித்தொகுப்புக்குத் தேவையான பச்சையம் காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். இவற்றில் விலங்குக் கலங்களில் காணப்படாத பல விசேட அமைப்புக்கள் உள்ளன. கலச்சுவர், பச்சையவுருமணி, பெரிய புன்வெற்றிடம் ஆகியன தாவரக்கலங்களின் சிறப்பம்சங்களாகும்.

Thumb
தாவரக் கலம்

மேலும் பார்க்க

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.