அங்காசாபுரி கொமுட்டர் நிலையம்
அங்காசாபுரிக்கு அருகில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அங்காசாபுரி கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Angkasapuri Komuter Station; மலாய்: Stesen Komuter Angkasapuri); சீனம்: 安卡萨普里通勤站) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் அங்காசாபுரிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
இந்த நிலையம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் மூலமாகச் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் அங்காசாபுரிக்கு முதன்மையாகச் சேவை செய்கிறது.
மலேசிய வானொலி தொலைக்காட்சியின் தலைமையகமான அங்காசாபுரியின் பெயரால் இந்த நிலையம் அழைக்கப்படுகிறது.
Remove ads
பொது
இந்த நிலையத்திற்கு அருகில் பந்தாய் டாலாம் மற்றும் கம்போங் கெரிஞ்சியின் சுற்றுப்புறங்கள் உள்ளன. கெரிஞ்சி இலகு தொடருந்து நிலையம் (Kerinchi LRT Station) மற்றும் அப்துல்லா உக்கும் நிலையம் ஆகிய இலகு தொடருந்து நிலையங்களும் அருகிலேயே உள்ளன.[2]
இந்த நிலையத்தில் பாதசாரி அணுகல் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
அங்காசாபுரி
அங்காசாபுரி (Angkasapuri) என்பது மலேசிய தகவல் துறை அமைச்சின் முக்கிய அரசாங்கக் கட்டிடம் ஆகும். இது மலேசிய வானொலி தொலைக்காட்சியின் (RTM) தலைமையகமாகவும் உள்ளது. அங்காசாபுரி கட்டிடம் லெம்பா பந்தாய் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[3][4]
மலேசியாவின் ஒலிபரப்பு மையத்திற்கு, "அங்காசாபுரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.1966-இல் கட்டுமானம் தொடங்கி பிப்ரவரி 1968-இல் நிறைவடைந்தது. அங்காசாபுரியை மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் 17 பிப்ரவரி 1968 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.[5]
அங்காசாபுரி வளாகம்
அங்காசாபுரி ஒலிபரப்பு மையம் கோலாலம்பூர் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 33 ஏக்கர் நிலப்பரப்பில் 10 மாடிகள் கொண்ட கட்டிடமாக உள்ளது.
அங்காசாபுரியில் இருந்து முதல் ஒலிபரப்பு 6 அக்டோபர் 1969 அன்று தொடங்கியது. விசுமா டெலிவிசன் (Wisma Televisyen) அல்லது விசுமா டிவி (Wisma TV) எனும் தொலைக்காட்சி வளாகம் 6 நவம்பர் 1969-இல் தொடக்கப்பட்டது.[6]
பேருந்துகள் சேவை
Remove ads
காட்சியகம்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads