அரிக்காம்போதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரிக்காம்போதி அல்லது ஹரிகாம்போஜி கருநாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண (எழுநிறைவற்ற) மேள பத்ததியில் இவ்விராகத்திற்கு அரிக்கேதாரகௌள என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இதற்கு கமஜ் தாட் என்பது பெயர்.[1][2]
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம1 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம1 க3 ரி2 ஸ |
- பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
- பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் வாசஸ்பதி ஆகும்.
- பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப் பண்" என்றழைக்கப்பட்டது.
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக நடபைரவி, தீரசங்கராபரணம், கரகரப்பிரியா, ஹனுமத்தோடி, மேசகல்யாணி ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
உருப்படிகள்
- கிருதி : தினமணி வம்ச : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : ராம நன்னு ப்ரோவரா : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : நீயே கதி : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : பார்க்க பார்க்க : மிஸ்ர சாபு : கோபாலகிருஷ்ண பாரதியார்.
- கிருதி : சம்போ சங்கர : ஆதி : முத்துத் தாண்டவர்.
- கிருதி : பாமாலைக்கிணை : ஆதி : பாபநாசம் சிவன்.
ஜன்ய இராகங்கள்
ஹரிகாம்போதியின் ஜன்ய இராகங்கள் இவை.
- பகுதாரி
- ஈசமனோகரி
- கமாஸ்
- துவிஜாவந்தி
- நாராயணகௌளை
- சகானா
- சாயாதரங்கிணி
- காம்போதி
- காப்பிநாராயணி
- நவரசகன்னட
- செஞ்சுருட்டி
- கேதாரகௌளை
- எதுகுலகாம்போதி
- நாதக்குறிஞ்சி
- ரவிச்சந்திரிகா
- சரஸ்வதிமனோகரி
- சுத்ததரங்கிணி
- சாமா
- சுருட்டி
- நாகஸ்வராவளி
- குந்தளவராளி
- மோகனம்
- உமாபரணம்
- ஹிந்துகன்னட
- கோகிலத்வனி
- கானவாரிதி
- மாளவி
- கதாதரங்கிணி
- பலஹம்ச
- சாயாநாட்டை
- சுபூஷணி
- விவர்த்தனி
- பிரதாபவராளி
- ஹிந்துநாராயணி
- உழைமாருதம்
- அம்போஜினி
- ஹிந்தோளகாமினி
- சாவித்திரி (இராகம்)
- வீணாவாதினி
- ராகவினோதினி
- தைவதச்சந்திரிகா
- ஆன்தாளி
இசைத்தமிழ்
- அரிகாம்போதி என்பது செம்பாலை என்ற முதல் தமிழ்பண்ணைக் குறிப்பதாகும்.
Remove ads
திரையிசைப் பாடல்கள்
ஹரிகாம்போஜி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- பழமுதிர்சோலை :- வருஷம் பதினாறு
- பொட்டு வைத்த முகமோ
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads