அரும்பாக்கம் மெற்றோ நிலையம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம் From Wikipedia, the free encyclopedia

அரும்பாக்கம் மெற்றோ நிலையம்map
Remove ads

அரும்பாக்கம் மெற்றோ நிலையம் (Arumbakkam Metro Station) சென்னை மெற்றோவின் 2வது வழித்தடத்தில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையமாகும். இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. சென்னை மெற்றோ, சென்னை மத்திய மெற்றோ நிலையம் - பரங்கிமலை தொடருந்து நிலையம் தொடரில் நடைபாதை IIல் உள்ள உயரமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையம் விநாயகபுரம், சூளைமேடு மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி கழக காலனி பகுதிகளுக்குச் சேவை செய்கின்றது.

விரைவான உண்மைகள் அரும்பாக்கம் மெற்றோArumbakkam Metro, பொது தகவல்கள் ...
Remove ads

கட்டுமான வரலாறு

இந்த நிலையத்தை ஒருங்கிணைந்த கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு (சி.சி.சி.எல்) கட்டியது. இந்த நிலையம் கட்டமைப்பு செப்டம்பர் 2013இல் நிறைவடைந்தது. கோயம்பேடு, CMBT, வடபழனி மற்றும் அசோக் நகர் ஆகிய நிலையங்களை ஒருங்கிணைத்துக் கட்டுவதற்கு 1,395.4 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.[1]

நிலையம்

இந்த நிலையம் உள்வட்ட சுற்றுச்சாலையில் உள்ள உயரமான நிலையமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் தரைதளம், மேடை எனப் பலநிலைகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையத்தில் நான்கு நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், நான்கு மின்தூக்கி மற்றும் எட்டு நகரும் படிகளுடன் உள்ளது. ஊனமுற்றோர் மற்றும் வயதானோர் தரைதளத்திலிருந்து மேல் மட்டத்திலிருந்து செல்ல சறுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது.[1] தளங்களின் உயரம் தரை மட்டத்திலிருந்து சுமார் 15 மீட்டர் ஆகும். நடைதளத்தின் மொத்த நீளம் 140 மீ ஆகும். [2]

தளவமைப்பு

ஜி தெரு நிலை வெளி / நுழைவு
எல் 1 மெஸ்ஸானைன் கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், மெட்ரோ கார்டு வழங்கும் இயந்திரங்கள், கடக்கும் வழி
எல் 2 பக்க மேடை எண் -1, இடதுபுறத்தில் கதவுகள் திறக்கப்படும்
தென்பகுதி நோக்கி → பரங்கிமலை தொடருந்து நிலையம்
வடபகுதி நோக்கி →சென்னை மத்திய மெற்றோ நிலையம்
பக்க மேடை எண் -2, கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும்ஊனமுற்றவர் அணுகல்
எல் 2

வசதிகள்

  • மின்தூக்கி
  • பயணச்சீட்டு முன்பதிவு இயந்திரங்கள்
  • சிற்றுண்டி நிலையங்கள்
  • ஏடிஎம்
Remove ads

வணிக மையம்

சென்னை மெற்றோ திட்டத்தின் முதல் கட்டமாக வணிக மையங்களாக மாற்றப்படுவதாக அடையாளம் காணப்பட்ட ஐந்து நிலையங்களில் அரும்பாக்கம் நிலையம் ஒன்றாகும். மற்றவை சி.எம்.பி.டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் அசோக் நகர். 51,379 சதுட மீட்டரில் இரண்டு ஒன்பது மாடிக் கட்டிடங்களும் 32,721 சதுர அடி பரப்பிலும் அரும்பாக்கம் நிலையத்தில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. [3]

இணைப்புகள்

மாநாகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை) பேருந்து வழித்தடங்கள் எண் 16 கே, 23 எம், 27 சி, 27 சிஎன்எஸ், 27 டி, 27 வி, 54 சிடி, 70/70 ஏ, 70 சி, 70 டி, 70 ஜி, 70 கே, 70 பி, 70 எஸ், 70 டி, 70 வி, 70 டபிள்யூ, 77 ஜே, 111, 113, 114, 114T, 170, 170A, 170B, 170C, 170CET, 170G, 170K, 170L, 170M, 170P, 170S, 170T, 270J, 500C, 568C, 568T, 570, 570AC, 570S, A70, B70, D70, D70CUT, D70NS, D170, F70, L18, L51, L70, M70, M70CNS, M70D, M70F, M70N, M70NS, M70S, M88M, M170T, M270, S32, S34, T70 அருகிலுள்ள MMDA (அரும்பாக்கம்) பேந்ருந்து நிலையத்திலிருந்து சேவை செய்கிறது. [4]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads