அவரான் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவரான் மாவட்டம் (Awaran District), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் அமைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் அவரான் நகரம் ஆகும். அவரான் நகரம் கராச்சி நகரத்திற்கு வடமேற்கே 314 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குஸ்தர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 11 நவம்பர் 1992 அன்று அவரான் மாவட்டம் நிறுவப்பட்டது.[3]
Remove ads
அமைவிடம்
அவரான் மாவட்டத்திற்கு தெற்கில் குவாதர் மாவட்டம், கிழக்கில் லஸ்பெலா மாவட்டம், மேற்கில் கெச் மாவட்டம் மற்றும் பஞ்ச்கூர் மாவட்டம், வடகிழக்கில் குஸ்தர் மாவட்டம், வடமேற்கில் வாசூக் மாவட்டம் அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
துணை ஆணையாளர் தலைமையில் அவரான் மாவட்டக் குழு 5 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் பின்வருமாறு:
- அவரான் வட்டம்
- கிஷ்கௌர் வட்டம்
- ஜல் ஜோவா வட்டம்
- கோராக் ஜோவா வட்டம்
- மஷ்கே வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,510 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அவரான் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,78,958 ஆகும். [4]இசுலாமிய சம்யத்தை பெரும்பான்மையாக பின்பற்றும் இம்மாவட்ட மக்களின் சராசரி எழுத்தறிவு 36.34% ஆகும். இம்மாவட்டத்தில் பலூச்சி மொழி பெரும்பான்மையாக பேசப்படுகிறது.
சமயங்கள்
இம்மாவட்டத்தில் பெரும்பான்மையோர் இசுலாம் 98.58% மற்றும் சிறுபான்மையோர்கள் இந்து, கிறித்துவ சமயங்களை 1.42% பயில்கின்றனர்.
மொழிகள்
இம்மாவட்டத்தில் பலூச்சி மொழியை 98.58% பிராகுயி மொழி 1.17% மற்றும் பிற மொழிகள் 0.66% பேர் பேசுகின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
நூல் பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads