ஆகும்பே
கர்நாடகத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆகும்பே (Agumbe) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஅள்ளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியேற்றமாகும்.[3] இது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடர்ந்த காடுகள் நிறைந்த மலைநாடு பகுதியில் அமைந்துள்ளது.[1][4] அதிக மழைப்பொழிவு காரணமாக, இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சிக்குப் பிறகு "தென்னிந்தியாவின் சிரபுஞ்சி" என்ற அடைமொழியைப் பெற்றுள்ளது.[5]
மழைக்காடு பாதுகாப்பு முயற்சிகள், மருத்துவ தாவரங்களின் ஆவணங்கள், சுற்றுலா (மலையேற்றம் மற்றும் புகைப்படம் எடுத்தல்), குடிசைத் தொழிலை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் அகும்பே தொடர்புடையது.[2][6] ஆகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையம், ஆகும்பேயின் முதன்மை இனமான இராச நாகப்பாம்புகளுக்கான சரணாலயமாக நிறுவப்பட்டது.[7]
Remove ads
அமைவிடம்
சிமோகா மாவட்டத்தில் ஆகும்பே இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில், மங்களூருக்கு வடகிழக்கே சுமார் 98 கி.மீ. (61 மைல்) மற்றும் தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு வடமேற்கே 357 கி.மீ. (222 மைல்) அமைந்துள்ளது. இது சிருங்கேரியிலிருந்து தோராயமாக 24 கி.மீ. (15 மைல்) மற்றும் அரபிக்கடலிலிருந்து 55 கி.மீ. (34 மை) தொலைவில் உள்ளது. கடற்கரை நகரமான உடுப்பி அருகில் முக்கிய தொடர் வண்டி நிலையம் உள்ளது. அருகிலுள்ள மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் பாஜ்பேவில் இது சுமார் 94 கி.மீ. (58 மைல்) தூரத்தில் அமைந்துள்ளாது.[8] ஆகும்பே 823 மீ (2,700 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாக, ஆகும்பே யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக உள்ளது.[9] ஆகும்பே சோமேசுவரா வனவிலங்கு சரணாலயம் , குதுரேமுக் தேசிய பூங்கா ஆகியவற்றுக்கு அருகில் உள்ளது .
ஒரு சிறிய மலைக்கிராமமான ஆகும்பேவில், பார்வையாளர்கள் தங்குமிட வசதிகள் குறைவு. இதன் மக்கள் தொகை சுமார் 500 பேர். கிராமம் 3 சதுர கிலோமீட்டர் (1.2 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[10]
Remove ads
பொருளாதாரம்
ஆகும்பே கிராம மக்கள் விவசாயிகளாக உள்ளனர். நெல், பாக்கு போன்றவை பயிரிடப்படுகிறது. ரக்சா கவச நெசவாளர் கூட்டுறவு சங்கம் கிராமத்தில் குடிசைத் தொழிலின் தொடக்கத்தைக் குறிக்கிறது.[11]
சுற்றுலா
குண்டாத்ரி, குடசாத்ரி மலைகள், உடுப்பி, மல்பே, மங்களூர் (விமான நிலையம் மற்றும் துறைமுகம்), கர்கலா, கொல்லூர், சிருங்கேரி, சிக்மகளூர், சிமோகா, பத்ராவதி, என்.ஆர். புரம், சாகரா, ஓசநகர், தீர்த்தஹள்ளி போன்ற இடங்களை ஆகும்பேவிலிருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். கோடையில், நரசிம்ம பர்வதத்தை அடைய ஒரு மலையேற்றத்தைப் பயன்படுத்தப்படலாம்
- சூரியன் மறையும் இடம்
ஆகும்பேயிலிருந்து பத்து நிமிட பயண தூரத்தில் உடுப்பி-ஆகும்பே சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றிலிருந்து சூரியன் மறைவதை காணலாம்.[12] ஒரு நல்ல மாலை நேரத்தில், அரபிக்கடலிலும் சூரியன் மறைவதைக் காணலாம்.[13]
Remove ads
நிலவியல்
ஆகும்பே மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஈரமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த புவியியல் அதன் இயற்கைக்காட்சிக்கும், மலையேற்றத்திற்கு ஏற்றது. மேலும், இப்பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன.

அருவிகள்
ஆகும்பேவின் வடகிழக்கே அமைந்துள்ளா பர்க்கானா அருவி 850 அடி (259 மீ) உயரம் கொண்டது.[14] இது இந்தியாவின் பத்தாவது உயரமான அருவியாகும்.[15]
- ஒனகே அப்பி அருவி
400 அடி உயரம் கொண்ட ஒனகே அப்பி அருவி பர்கானா அருவியை விட சிறியது.[16] கன்னட மொழியில், "ஒனகே" என்றால் 'துடிக்கும் குச்சி' என்று பொருள். கிராம மக்கள் தானியங்களை மாவுக்கு அரைக்க பயன்படுத்தும் கருவி. அருவியைக் காண மழைக்காடு வழியாக 5 கி.மீ. மலையேற்றம் செய்ய வேண்டும்.
- ஜோகிகுண்டி அருவி
ஜோகிகுண்டி என்பது ஆகும்பேக்கு அருகில் உள்ள ஒரு சிறிய அருவியாகும். இது சுமார் 800 மீட்டர் ஆழம் கொண்டது.
- குடுலு அருவி
குடுலு அருவி ஆகும்பேயிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது..

காலநிலை
உரோமுலசு விட்டேக்கர் நிறுவிய இந்தியாவின் முதல் தானியங்கி வானிலை நிலையம் ஆகும்பேவில் அமைந்துள்ளது. ஆகும்பே வெப்பமண்டல காலநிலை, வெப்பம் மற்றும் ஈரப்பதம் கொண்ட மழைக்காடு பகுதியில் அமைந்துள்ளது. கோப்பென் காலநிலை வகைப்பாடு அமைப்பின் கீழ் வெப்பமண்டல பருவமழை காலநிலையாக உள்ளது.[17] ஆகும்பேயின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்த்தியான வெள்ளி நிற மூடுபனி உருவாகிறது.[18]
ஆகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையம்
2005 இல் ஆகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையம் உரோமுலசு விட்டேக்கர் என்ற தாவரவியலாளாரால் நிறுவப்பட்டது. விட்டேக்கர் 1970 களில் இராச நாகத்தைப் ஆராயத் தொடங்கியதிலிருந்து அகும்பேவை நன்கு அறிந்திருந்தார்.[19] உள்ளூர் பல்லுயிர் தரவுத்தளத்தை உருவாக்குவது, தனிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது, இந்தியாவின் வனவியல் துறையுடன் ஒத்துழைப்பது, மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைக்காடுகளைப் பாதுகாப்பது, வனப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அப்பகுதியில் வசிப்பவர்களுக்குக் கற்பிப்பது நிலையத்தின் நோக்கமாகும். இராச நாகம், ஒரு அழிந்து வரும் இனம் நிலையத்தின் "முதன்மை இனம்".[20] நிலையம் 8 ஏக்கர் (32,000 மீ2) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதற்கான நிதி விட்டேக்கரின் தாயார் டோரிஸ் நோர்டனிடமிருந்தும், 2005 இல் விட்டேக்கருக்கு கிடைத்த விட்லி விருதிலிருந்தும் கிடைத்தது.
மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு பகுதி
இப்பகுதியில் உள்ள முக்கியமான மூலிகை தாவரங்களை பாதுகாக்க 1999 ஆம் ஆண்டு ஆகும்பே மூலிகை தாவரங்கள் பாதுகாப்பு பகுதி நிறுவப்பட்டது. "உள்ளூர் சுகாதார மரபுகளின் மறுமலர்ச்சிக்கான அறக்கட்டளை" ஆகும்பேயில் 371 தாவர வகைகளை பதிவு செய்துள்ளது. அவற்றில் 182 மருத்துவ குணம் கொண்டவை.[21][22]
விலங்கினங்கள்
- பாலூட்டிகள்
அழிந்து வரும் சோலைமந்தி [23][24], புலி,[25] சிறுத்தை, கடமான், கிழக்கத்திய பெரும் அணில், இந்தியாவின் காட்டு செந்நாய், இந்தியக் காட்டெருது, கேளையாடு போன்ற பெரிய மற்றும் சிறிய பாலூட்டிகளுக்கு ஆகும்பே ஒரு சூழலை வழங்குகிறது.

- ஊர்வனங்களும், நீர்வாழ் உயிரினங்களும்
அருகி வரும் முதன்மை இனமான இராச நாகத்தின் பாதுகாப்பிற்காக ஆகும்பே மழைக்காடுகளின் நிதியை உருவாக்கி, அதை பாதுகாக்கப்படுகிறது.[26] மீட்கப்பட்ட இராச நாகங்களை வானொலி மூலம் கண்டறிவதற்கான ஆகும்பே அடிப்படையிலான அறிவியல் திட்டம், இடமாற்றம் அவற்றின் உயிர்வாழ்வதற்கு உதவியாக உள்ளதா என்பதைத் தீர்மானிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[27] இப்பகுதியில் உள்ள பிற ஊர்வன மற்றும் நீர்வாழ்வனவற்றில் கொச்சி பிரம்பு ஆமை, பறக்கும் பல்லி ஆகியவை அடங்கும்.
- பறவைகள்
ஆகும்பே பறவை ஆர்வலர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் ஏற்ற பிரபலமான இடமாகும். உள்ளூர் பறவைகளில் தீக்காக்கை, மஞ்சள்-புருவம் கொண்ட கொண்டைக்குருவி, இலங்கை தவளைவாயன் ஆகியவை அடங்கும்.[28]

Remove ads
பிரபல கலாச்சாரத்தில்
மால்குடி டேஸ் (1985) என்பது சங்கர் நாக் இயக்கிய ஒரு தொலைக்காட்சித் தொடராகும். இது ஆர். கே. நாராயணன் தனது கதைகளில் பயன்படுத்திய மால்குடி என்ற கற்பனை ஊரைப் பற்றி எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் பல அத்தியாயங்கள் ஆகும்பேயில் படமாக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டில், கவிதா லங்கேஷ் (இயக்குநர்) மூலம் மால்குடி டேஸின் புதிய அத்தியாயங்களின் தொகுப்பு அகும்பேயில் படமாக்கப்பட்டது.[29]
இவற்றையும் பார்க்கவும்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
