நிர்மல் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிர்மல் மாவட்டம் (Nirmal district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [2][3]தெலங்கானா மாநிலத்தின் வடக்குப் பகுதி மாவட்டமான ஆதிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் மற்றும் பைன்சா பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நிர்மல் நகரம் ஆகும்.


Remove ads
புவியியல்
தக்கான பீடபூமியில், கோதாவரி ஆற்றின் வடிநிலத்தில் அமைந்த நிர்மல் மாவட்டம் 3,845 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [4] இம்மாவட்டத்தின் வடக்கில் ஆதிலாபாத் மாவட்டம், வடகிழக்கில் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம், கிழக்கில் மஞ்செரியல் மாவட்டம், தெற்கில் ஜக்டியால் மாவட்டம் மற்றும் நிசாமாபாத் மாவட்டங்களும், மேற்கில் மகாராட்டிரம் மாநிலத்தின் நாந்தேட் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 3,845 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நிர்மல் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7,09,418 ஆகும்.[4] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1046 பெண்கள் வீதம் உள்ளனர். 78% மக்கள் ஊரகப்பகுதியில் வாழ்கின்றனர். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 185 நபர்கள் வீதம் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
நிர்மல் மாவட்டம், நிர்மல் மற்றும் பைன்சா என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டது. இவ்விரண்டு வருவாய் கோட்டத்தில் 19 வருவாய் வட்டங்கள் உள்ளது.[4][5] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவராக இளம்பாரதி உள்ளார்.[6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads