தேசிய ஜனநாயகக் கூட்டணி
இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய ஜனநாயக் கூட்டணி ('National Democratic Alliance (NDA), இந்தியாவில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் செயல்படும் ஒரு வலது சாரி அரசியல் கூட்டணி ஆகும்.[2] இக்கூட்டணி 1998ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது இக்கூட்டணி இந்திய அரசையும், 15 இந்திய மாநிலங்களையும், 1 ஒன்றிய பகுதியையும் ஆட்சி செய்கிறது.
1998ல் தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல் தலைவர் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆவார். 2004 முதல் 2014 முடிய இந்தியத் துணை பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி இதன் தலைவராக செயல்பட்டார். 2014ம் ஆண்டு முதல் அமித் சா தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைவராக உள்ளார்.
தேசிய ஜனநாயக் கூட்டணி 1998 முதல் 2004 முடிய இந்திய அரசை ஆட்சி செய்தது. பின்னர் 2014 பொதுத் தேர்தலில் 38.5% வாக்குகள் பெற்று, பெரும்பான்மையான மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது.[3] இதன் தலைவர் நரேந்திர மோதி 26 சூன் 2014 அன்று இந்தியப் பிரதமர் ஆனார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் இக்கூட்டணி 353 மக்களவைத் தொகுதிகளை கைப்ப்ற்றியதுடன் 45.43% வாக்குகளையும் பெற்று மீண்டும் நரேந்திர மோதி தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது.[4]
Remove ads
வரலாறு


1998 இந்தியப் பொதுத் தேர்தலை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி மே 1998ல் நிறுவப்பட்டது. இக்கூட்டணியில் மாநிலக் கட்சிகளான சமதா கட்சி, அதிமுக, சிவசேனா, சிரோமணி அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய அரசியல் கட்சிகள் இருந்தது. தேர்தலுக்குப் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் அடல் பிகாரி வாச்பாய் இக்கூட்டணி சார்பில் பிரதம அமைச்சர் ஆனார்.[5]
ஒராண்டு கழித்து அதிமுக இக்கூட்டணிக்கு தனது ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் வாஜ்பாய் ஆட்சி இழந்தார். இதனால் நடைபெற்ற 1999 இந்தியப் பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணியில் திமுக போன்ற சில மாநிலக் கட்சிகளுடன் இணைத்து பெரும்பாலான மக்களவை தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமர் ஆனார்.[6]
2004 பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 186 மக்களவைத் தொகுதிகளை மட்டும் கைப்பற்றி ஆட்சியை இழந்தது.[7][8]
Remove ads
அமைப்பு
2008ம் ஆண்டு வரை ஜார்ஜ் பெர்னாண்டஸ் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பின்னர் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் 16 சூன் 2013 முடிய ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பின்னர் சுன் 2013 முதல் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.[9] தெலுங்கு தேசம் கட்சி ஆதரவை விலக்கி கொண்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானது.
19 ஆகஸ்டு 2017 அன்று நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து பிகார் மாநிலத்தில் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தது.[10]
Remove ads
நாடாளுமன்றத்தில் பலம்
இதனையும் காண்க
குறிப்புகள்
- Most member parties are centre-right or right-wing,[1] but a minority of them are centrist or centre-left.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads