இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம், 2016
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியத் துடுப்பாட்ட அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் 2016 சூலை 9 முதல் ஆகத்து 22 வரை நான்கு தேர்வுத் துடுப்பாட்ட தொடர் ஆட்டங்களில் பங்குகொண்டது.[1][2][3]
இந்திய அணியின் இச்சுற்றுப் பயணத்தின் போது மேலும் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளை நடத்துவது தொடர்பாக 2016 சூலையில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட வாரியத்துடன் பெச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆகத்து இறுதியில் புளோரிடாவில் போட்டிகளை நடத்தலாம் என மேற்கிந்திய குழு தெரிவித்தது.[4] 2016 ஆகத்து 2 இல், இந்தியக் குழு இரண்டு இ20ப போட்டிகளை அமெரிக்காவின் புளோரிடாவில் 2016 ஆகத்து 27-28களில் நடத்துவதற்கு இணங்கியது.[5]
தேர்வுத் தொடரை இந்தியா 2–0 என்ற கணக்கிலும், இ20ப தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 1–0 என்ற கணக்கிலும் வென்றன.
Remove ads
அணிகள்
Remove ads
தேர்வுத் தொடர்
1வது தேர்வு
21–25 சூலை 2016 ஓட்டப்பலகை |
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ரொசுட்டன் சேசு (மேஇ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- விராட் கோலி (இந்) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது இரட்டை சதத்தை எடுத்தார்.[13]
- இரவிச்சந்திரன் அசுவினின் 7/83 மேற்கிந்தியத் தீவுகளில் இந்தியப் பந்து வீச்சாளர் ஒருவரின் சிறந்த ஆட்டம் ஆகும்.[14]
- இந்த ஆட்டம் இந்தியாவின் ஆசியாவுக்கு வெளியேயான போட்டிகளில் மிகப் பெரிய வெற்றியாகும். சொந்த நாட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மிகப் பெரும் தோல்வியாகும்.[14]
2வது தேர்வு
30 சூலை–3 ஆகத்து 2016 ஓட்டப்பலகை |
எ |
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது..
- மிகுவேல் கமின்சு (மேஇ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 18வது "ஐந்து-இலக்குகளைப்" பெற்றார்.[15]
- ரொசுட்டன் சேசு (மே.இ) தனது முதலாவது தேர்வு சதத்தை பெற்றார்.[16]
3வது தேர்வு
9–13 ஆகத்து 2016 ஓட்டப்பலகை |
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக 3-ம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
- அல்சாரி யோசப் (மே.இ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
4வது தேர்வு
18–22 ஆகத்து 2016 ஓட்டப்பலகை |
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- முதலாம் நாள் ஆட்டம் மழை காரணமாக மதிய இடைவேளைக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. 2-ம், 3-ம், 4-ம், 5-ம் நாள் ஆட்டங்களும் மழை காரணமாக நடைபெறவில்லை.
- இவ்வாட்ட முடிவை அடுத்து இந்தியா பன்னாட்டு துடுப்பாட்டக் குழுவின் தரவரிசையில் முதலாவது இடத்தை பாக்கித்தானிடம் இழந்தது.[17]
Remove ads
இ20ப தொடர்
1வது இ20ப
27 ஆகத்து 2016 ஓட்டப்பலகை |
எ |
||
எவின் லூயிசு 100 (49) ரவீந்திர ஜடேஜா 2/39 (3 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐக்கிய அமெரிக்காவில் இந்தியா விளையாடிய முதலாவது துடுப்பாட்டப் போட்டி இதுவாகும்.[18]
- எவின் லூயிசு (மேஇ), கே. எல். ராகுல் (இந்) தமது முதலாவது இ20ப சதத்தை எடுத்தனர்.
- மேற்கிந்தியத் தீவுகள் 21 ஆறு ஓட்டங்களை எடுத்து இ20ப போட்டிகளில் உலக சாதனை புரிந்தனர்.[19]
2வது இ20ப
28 ஆகத்து 2016 ஓட்டப்பலகை |
எ |
||
ரோகித் சர்மா 10* (8) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆரம்ப ஆட்டம் 40 நிமிடங்களுக்குத் தடைப்பட்டது.[20]
- இந்திய ஆட்டத்தின் 2 வது ஓவருடன் மழை காரண்மாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 200வது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads