இந்தியா நேபாள எல்லை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய–நேபாள எல்லை (India–Nepal border) இந்திய நாட்டுக்கும் நேபாள நாட்டுக்கும் இடையே இருக்கும் எல்லைக் கட்டுபாடுகள் ஏதுமில்லாமல் மக்கள் சுதந்திரமாக சென்று வரக்கூடிய ஓர் அனைத்துலக எல்லை வகையாகும். 1,758 கிலோ மீட்டர் அல்லது 1092 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த எல்லையில் இமயமலையின் சில பகுதிகள் மற்றும் சிந்து-கங்கைச் சமவெளி ஆகியவை அடங்கியுள்ளன. எல்லையின் தற்போதைய வடிவமானது நேபாளத்துக்கும் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கும் இடையில் 1816 ஆம் ஆண்டு ஏற்பட்ட சகௌலி ஒப்பந்தத்திற்கு பின்னர் நிறுவப்பட்டதாகும். இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து தற்போதைய எல்லை நேபாளத்திற்கும் இந்திய குடியரசிற்கும் இடையிலான ஓர் எல்லையாக அங்கீகரிக்கப்பட்டது.[1].
சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியம் கைப்பற்றியிருந்த சிக்கிம், டார்ஜிலிங், குமாவுன், கார்வால் மற்றும் கிழக்கு தராய் பகுதிகளை இந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு விட்டுத்தர ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் கம்பெனி ஆட்சியாளர்களிடமிருந்த நயா முலுக் பகுதி நேபாள இராச்சியத்திற்கு திருப்பி வழங்கப்பட்டது.
Remove ads
பெரிய எல்லை கடப்புகள்
பெரும்பாலும் முக்கிய எல்லைக் கடப்புகளில் பொதுவாக சரக்கு சுங்கவரியும் மூன்றாம் நாடுகளின் குடிமக்களுக்கான குடியேற்ற நுழைவுச் சோதனையும் செயல்முறையில் உள்ளன.
இந்திய நேபாள எல்லையில் உள்ள பெரும் கடப்புகள்
- பனிடாங்கி, டார்சிலிங், மேற்கு வங்காளம், இந்தியா - ககர்பிட்டா, நேபாளம்
- சோக்பானி, பீகார், இந்தியா - விராட்நகர், நேபாளம்
- ரக்சால், பீகார், இந்தியா - வீரகுஞ்ச், நேபாளம் (இது நேபாளத்தின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது)
- சோனாலி, உத்தரப் பிரதேசம்., இந்தியா - சித்தார்த்தநகர், நேபாளம்
- ரூபாயிடிகா, உ.பி. - நேபாள்கஞ்ச், நேபாளம்
- பான்பாசா, உத்தராகண்ட், இந்தியா - பீம்தத்தா, நேபாளம்.
- பிகார், இந்தியா - சுஸ்தா, நேபாளம்
Remove ads
சிறிய எல்லைக் கடப்புகள்
இந்தியா-நேபாள எல்லையில் வேலிகள் இல்லாததால், பல சிறிய அதிகாரபூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடப்புகள் உள்ளன. சிறிய அதிகாரபூர்வ எல்லைக் கடப்புகளை சோதி பன்சார் (சிறு சுங்கம்) என்று அழைக்கின்றனர். இந்திய நேபாள எல்லையில் உள்ள சிறு கடப்புகள்
- மிரிக், டார்சிலிங், இந்தியா - பசுபதிநகர், இலாம் மாவட்டம், நேபாளம்
- பரியா, பீகார், இந்தியா – கெளரிகஞ்ச், ஜாப்பா மாவட்டம் நேபாளம்
- ஆமா கச்சி, பீகார், இந்தியா - ரங்கோலி, மொரங் மாவட்டம், நேபாளம்
- பீம்நகர், பீகார், இந்தியா - பண்டாபரி, சுன்சரி மாவட்டம் (கோசி அணை வழியாக)
- மாதவாபூர், பீகார், இந்தியா - ஜனக்பூர், நேபாளம்
- பீட்டாமோர், பீகார், இந்தியா - சலேசுவர், நேபாளம்
- சோன்பர்சா, பீகார், இந்தியா - மலாங்வா, சர்லாஹி மாவட்டம், நேபாளம்
- பைர்கானியா, பீகார், இந்தியா - கவுர், ரவுதஹட் மாவட்டம், நேபாளம்
- பிக்னா தோரி, மேற்கு சம்பரன், பீகார், இந்தியா - தோரி, பர்சா மாவட்டம், நேபாளம்
- பார்னி, உ.பி., இந்தியா - கிருசுணநகர், நேபாளம்
- துளசிபூர், பல்ராம்பூர், உ.பி., இந்தியா - கொயிலாபாசு, நேபாளம்
- தால் பாகுரா, உ.பி., இந்தியா - லட்சுமண்பூர், நேபாளம்
- மூர்த்தியா, உ.பி., இந்தியா - குலாரியா, பர்தியா மாவட்டம், நேபாளம்
- துத்வா தேசிய பூங்கா, உ.பி. - தங்கடி, நேபாளம் போன்றவை இதில் அடங்கும்.
Remove ads
எல்லை பாதுகாப்பு
இந்தியா-நேபாள எல்லைப் பகுதி ஒப்பீட்டளவில் அமைதியானதாகும். இந்திய மற்றும் நேபாள குடிமக்கள் இவ்விரு நாடுகளுக்குள் நுழைய கடவுச்சீட்டு அல்லது விசாக்கள் ஏதும் தேவையில்லை. சுற்றுலா மற்றும் பொருட்கள் வாங்க ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த எல்லையை கடக்கிறார்கள்.
இந்தியப் பகுதியில் உள்ள எல்லைபகுதியானது உள்ளூர் காவல்துறை மற்றும் மத்திய எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவின் சாசுத்ரா சீமா பால் காவல் படையால் கட்டுப்படுத்தப்படுகிறது. நேபாளி பகுதியில் உள்ள எல்லையானது ஆயுத காவல் படை மற்றும் நேபாள காவல்துறையின் உள்ளூர் கிளையினால் கட்டுப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் (இந்தியா) மற்றும் (நேபாளம்) எல்லையில் இருநாடுகளின் படைகளும் இணைந்து கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றன.[2].
உள்ளூர் மட்டத்தில் இந்திய மற்றும் நேபாளி மாவட்ட அதிகாரிகள் அந்தந்த எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அடிக்கடி தவறாமல் சந்திக்கின்றனர். இத்தகைய கூட்டங்களில் பொதுவாக இந்தியாவிலிருந்து மாவட்ட நீதிபதிகள், மத்தியப் பாதுகாப்பு படையின் பிரதிநிதிகள், சுங்கத் தலைவர்கள் போன்றவர்களும் நேபாளத்திலிருந்து தலைமை மாவட்ட அதிகாரி, உள்ளூர் ஆயுதப்படை தலைவர், காவல்துறைத் தலைவர், சுங்கத் தலைவர் போன்ற அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர் [3].
எல்லை சர்ச்சைகள்
இந்தியாவும், நேபாளமும் 1,880 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. அதில் 98% எல்லைப்பகுதி தெளிவாக இருக்கிறது. இந்தியா-சீனா-நேபாளம் எல்லைகளுக்கு அருகே அமைந்த, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின்பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை, நேபாளம் தனதென கூறி வருகிறது.[4][5] இந்நிலையில் நேபாள அரசு லிம்பியாதுரா, காலாபானி, லிபுலெக் ஆகிய பகுதிகளை நேபாள நாடு தனது புதிய அரசியல் வரைபடத்தில் சேர்த்து கொண்டது தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை 13 சூன் 2020 (சனிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.[6]இதற்கு இந்தியா தனது பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது.[7]காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகள் இந்தியாவின் பிதௌரகட் மாவட்டத்திற்கு உரியது என பழைய நில ஆவணங்களை இந்தியா வெளியிட்டுள்ளது.[8]
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் தற்போது இரண்டு பிராந்திய மோதல்கள் உள்ளன. காலாபானி பிரதேசத்திற்கு வட மேற்கில் உள்ள நேபாளத்தின், இந்தியா-நேபாளம்-சீனா எல்லையில் உள்ள காலாபானி பிரதேசத்தில் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மற்றும் இந்தியாவின் பிகார்- தெற்கு நேபாள எல்லையில் உள்ள சுஸ்தா பகுதியில் 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பிரதேசம் ஆகியன சர்ச்சைக்குரிய இவ்விரு பகுதிகளாகும் [9][10]. கைலாசு மானசரோவர் பாதையில் கடல் மட்டத்திலிருந்து 3,600 மீட்டடர் உயரத்தில் காலாபானி அமைந்துள்ளது. இது இந்தியாவின் உத்தரகண்ட் மற்றும் நேபாளத்தின் சுதூர்பாசிம் மாநிலத்தின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் உரிமைகோரல்களை ஆதரிப்பதற்காக தங்கள் சொந்த பகுதியில் உள்ள பகுதி உட்பட வரைபடங்களை தனித்தனியாக தயாரித்து வருகின்றன.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads