இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி

From Wikipedia, the free encyclopedia

இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி
Remove ads

இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Indera Mahkota; ஆங்கிலம்: Indera Mahkota Federal Constituency; சீனம்: 英迪拉马哥打国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், குவாந்தான் மாவட்டத்தில் (Kuantan District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P082) ஆகும்.[6]

விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர்களின் எண்ணிக்கை ...




Thumb

2022-இல் இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[5]

  மலாயர் (68.7%)
  சீனர் (25.4%)
  இதர இனத்தவர் (0.5%)

இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

Remove ads

குவாந்தான் மாவட்டம்

குவாந்தான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

பண்டார் இந்திரா மக்கோத்தா

இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குவாந்தான் மற்றும் பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota). இதர நகரங்கள் பஞ்சிங், சுங்கை லெம்பிங், கம்பாங் மற்றும் பெசெரா. 11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா அரசாலும் ஆளப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீனாவில் இருந்து சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சீன வணிகர்களின் வருகையால் குவாந்தான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. குவாந்தான் நகரம் 1850-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Remove ads

இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி

மேலதிகத் தகவல்கள் இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022), மக்களவை ...
Remove ads

இந்திரா மக்கோத்தா தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads