இராஜ ராஜ நரேந்திரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜராஜ நரேந்திரன் (Rajaraja Narendra) ( ஆட்சி 1022-1061 கி.பி ) [1] தென்னிந்தியாவில் வேங்கி இராச்சியத்தின் கீழைச் சாளுக்கிய மன்னர் ஆவார். இராஜராஜ நரேந்திரன் ராஜமகேந்திராவரம் (தற்போதைய ராஜமன்றி) என்ற நகரை நிறுவினார். இவரது காலம் அதன் சமூக மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு பிரபலமானது. முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சியின் போது, ராஜமகேந்திராவரம் மேலைச் சாளுக்கியரால் சூறையாடப்பட்டது. சோழ வம்சத்தின் அரசியல் ஆதரவுடன் மேலைச் சாளுக்கியருக்கும் மற்ற அண்டை வம்சங்களுக்கும் இடையே போர்கள் நடந்தன.
முதலாம் இராசேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவி, விமலாதித்திய சாளுக்கியரின் மகனான இராஜராஜ நரேந்திரனை மணந்தார். இதன் மூலம் சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையிலான நிலப்பிரபுத்துவ உறவு அரிஞ்சய சோழன் முதல் மூன்று நூற்றாண்டுகளாக தொடர்ந்தது.
இராஜராஜ நரேந்திரனின் மகன், முதலாம் குலோத்துங்க சோழன் என்றும் அழைக்கப்படும் இராஜேந்திர சாளுக்கியன், தனது தாய்வழி மாமாவுக்காக கெடா (தற்போதைய மலேசியா) மீது படையெடுத்தார். சோழ மற்றும் சாளுக்கிய வம்சங்களை ஒன்றிணைத்து கங்கைகொண்டசோழபுரத்தில் சோழப் பேரரசின் மன்னரானார். அவர் ஒரு தாராளவாத ஆட்சியாளராக இருந்தார். மேலும், தனது ஆட்சியின் போது அவரது தளபதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு பல நில மானியங்களை வழங்கினார். வரிகளை தளர்த்தியதால், 'சுங்கம் தவிர்த்த சோழன்' என்றும் அழைக்கப்பட்டார்.
கிழக்கு சாளுக்கியர்களின் மூதாதையரான குப்ஜா விஷ்ணுவர்தனன் தனது திம்மாபுரம் தகடுகளில் மானவ்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டார்.[2] விஜயநகரப் பேரரசின் அரவிடு வம்சத்தினர் இராஜராஜ நரேந்திரனின் வம்சாவளியைக் கூறினர். இருப்பினும் அவர்கள் ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. [3]
Remove ads
இலக்கியப் படைப்புகள்
கீழைச் சாளுக்கிய வம்சம் சைனம் மற்றும் சைவ சமயத்தை ஆதரித்தது. இராஜராஜ நரேந்திரன் தானும் ஒரு சைவராக அறிவித்தார். மத குருமார்களை மதித்து தமிழ், தெலுங்கு, சமசுகிருதம் ஆகிய மொழிகளையும் மதங்களையும் வளர்த்தார். மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்க்குமாறு தனது ஆசிரியரும், ஆலோசகரும், அரசவைக் கவிஞருமான நன்னய்யா என்ற கவிஞரைக் கேட்டுக் கொண்டார். இருப்பினும், நன்னய்யா காவியத்தின் இரண்டரை பர்வங்களை மட்டுமே மொழிபெயர்க்க முடிந்தது.
Remove ads
இதனையும் காண்க
- கீழைச் சாளுக்கியர்
- சாளுக்கியர்
- சோழர்
- ராஜமன்றி
- சாரங்கதாரா
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads