உசாக் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உசாக் (Uşak Province, துருக்கியம்: Uşak ili ) என்பது மேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் அருகில் உள்ள மாகாணங்களாக மேற்கில் மனீசா, தெற்கில் தேனிஸ்லி, கிழக்கில், அபியோன்கராஹிசர், வடக்கே கெட்டஹ்யா ஆகியவை உள்ளன. மாகாண தலைநகரம் உசாக் நகரமாகும். இதன் வாகன பதிவு குறியீடு எண் 64 ஆகும். மாகாணம் 5,341 கி.மீ. 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.
துருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்வினையாக, 2018 ஆகத்தில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட முகநூல், கூகுள், இன்ஸ்ட்டாகிராம், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் எண்ணியில் விளம்பரம் செய்வதை நிறுத்த மாகாணம் முடிவு செய்தது. ஆயர் ஆண்ட்ரூ பிரன்சனை தடுப்பில் வைத்திருப்பது தொடர்பாக அமெரிக்கா இந்த தடைகளை விதித்தது.[1]
Remove ads
மாவட்டங்கள்
உசாக் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டப்பட்டுள்ளளது):
- பனாஸ்
- இஸ்மி
- கரஹல்லே
- சிவாஸ்லே
- உலுபே
- உசாக்
காட்சியகம்
- கரஹல்லுக்கு அருகிலுள்ள கிளாண்டராஸ் பாலம்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads