எம். எம். மானசி
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். எம். மானசி என்பவர் ஒரு இந்துஸ்தானி பிண்ணணி பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 பாடல்களை பாடியுள்ளார்[1]. இவர் டி. ஜி வைஷ்ணவா கல்லூரியில் முதுகலை நிர்வாகத்தை (MBA) பயின்றார். இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை சில: தமிழச்சி (ஆரம்பம்), கட்டிகிட (காக்கி சட்டை), ரோபோ ரோமியோ (தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்), ஆட்டக்கார மாமன் பொண்ணு (தாரை தப்பட்டை - இசைஞானி இளையராஜாவின் 1000ஆவது படமாகும்)[2].
Remove ads
வாழ்க்கை வரலாறு
மானசி ஜனவரி 8,1993 அன்று சென்னையில் தமிழ் பேசும் பெற்றோருக்கு பிறந்து மும்பையில் வளர்ந்தார். தனது 2 ஆம் வயதில் இசையைக் கற்று பொது இசை நிகழ்ச்சியில் நவராத்திரி மற்றும் கணபதி பூஜையில் பஜனைகளைப் பாடியவர். இவருக்கு எம். எம். மோனிஷா என்கிற தங்கையும் உள்ளார். இவரும் பிண்ணணி பாடகியாவார்.
இவரை இசைஞானி இளையராஜாதான் முதன் முதலில் கன்னட இசைத்துறையில் திரிஷ்யம் என்கிற படத்திற்கு பாட வாய்ப்பளித்தவர்[3]. இசையமைப்பாளர் வித்யாசாகர் மலையாளத்தில் ஓர் இந்திய பிரயாணக்கதா என்கிற படத்திற்கு பாட வாய்ப்பளித்துள்ளார். இவர் முதன் முதலாக பாலிவுடில் பாக் ஜானி என்கிற திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் டாடி மம்மி பாடடியவர். இப்பாட்டை 20 கோடி பேர் யூடியூபில் கண்டுள்ளார்கள்.
இவர் பாடகி மட்டுமில்லாமல் நடிகைகளுக்கு பிண்ணணிக் குரலும் கொடுப்பவராகவும் உள்ளார். நடிகை தமன்னா, சமந்தா, பிந்து மாதவி, திரிஷா, சுவாதி, ஹன்சிகா மோத்வானி, லஷ்மி மேனன் ஆகியோர்க்கு பிண்ணணி குரல் கொடுத்துள்ளார்.
Remove ads
திரைப்பட வரலாறு
பிண்ணணி பாடகியாக
பிண்ணணி குரலாக
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads