எம். ஜி. எஸ். நாராயணன்

ஓர் இந்திய வரலாற்றாசிரியரும், கல்வியாளரும், அரசியல் விமர்சகருமாவார். From Wikipedia, the free encyclopedia

எம். ஜி. எஸ். நாராயணன்
Remove ads

எம்.ஜி.எஸ். நாராயணன் (M. G. S. Narayanan) (20 ஆகத்து 1932 – 26 ஏப்ரல் 2025) என அழைக்கப்படும் முத்தாயில் கோவிந்தமேனன் சங்கர நாராயணன் என்பவர் ஓர் இந்திய வரலாற்றாசிரியரும், கல்வியாளரும், அரசியல் விமர்சகருமாவார். இவர் 1976 முதல் 1990 வரை கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைக்குத் தலைமை தாங்கினார் [1] இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகவும் (2001-03) பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் எம். ஜி. எஸ். நாராயணன், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

மலபார் மாவட்டத்தின் பொன்னானியில் முத்தாயில் கோவிந்தமேனன் சங்கர நாராயணனாக 1932 ஆகத்து 20 அன்று பிறந்தார்.[2]

பறப்பனங்காடி, பொன்னானி, கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய இடங்களில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற சென்னை சென்றார். இவர், 1965இல் பிரேமலதா என்பவரை மணந்தார். [3] 1973இல் கேரளப் பல்கலைக்கழகத்தால் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. [2]

"கேரளத்தின் பெருமாள்கள்" என்ற இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 1996இல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பொ.ச. 800 முதல் 1124 வரையிலான சேரர் காலத்திய கேரளத்தின் வரலாற்றை அனுபவ ரீதியாக அது மறுகட்டமைத்ததாக இராஜன் குருக்கல் கூறுகிறார்.[4] ஆர்தர் லெவெலின் பசாம் இவரது படைப்பை "நான் ஆராய்ந்ததில் மிகச் சிறந்ததும், முழுமையானதுமான இந்திய ஆய்வுகளில் ஒன்று" என்று பாராட்டினார். [5]

Remove ads

தொழில்

நாராயணன் கேரளப் பல்கலைக்கழகத்திலும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார். 1970 முதல் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் பீடத்தின் தலைவராக பணியாற்றிய இவர் 1992இல் ஓய்வு பெற்றார்.[2] 1976 முதல் 1990 வரை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் வரலாற்றுத் துறைத் தலைவராகவும் இருந்தார்.[6] 1982-1985 காலப்பகுதியில் இந்திய வரலாற்று காங்கிரசின் பொதுச் செயலாளராகவும், 1991இல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய கல்வி நிறுவனத்தில் வருகை தரும் உறிப்பினராக இருந்தார். 1990-1992 காலப்பகுதியில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி அமைப்பின் உறுப்பினர்-செயலாளராகவும் பணியாற்றினார்.

நாராயணன் தனது 'பிராமண தன்னலக்குழு மாதிரி'க்காக அறியப்படுகிறார்::145-146 மேலும், இவர் பர்டன் இச்டீனின் சோழ பேரரசுக்கான "கூறாக்கநிலை அரசு" மாதிரியை விமர்சித்த பலரில் ஒருவராக இருந்தார்.[7] :128 வேலுதட்டுடன், 6 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் நிலவிய பக்தி இயக்கம் "மன்னர்கள், பிராமணர்கள், சாதாரண மக்கள்" ஆகியோரை ஒற்றுமையுடன் ஒன்றிணைத்தது என்று நாராயணன் முன்மொழிந்தார். ஆனால் அது "சமத்துவத்தின் மாயை" என்று கராசிமா எழுதுகிறார். மற்ற அறிஞர்கள் இவரது மாதிரியில் உள்ள சில குறைபாடுகளைக் குறிப்பிட்டு வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். :113


இந்தியாவின் ஒரு செய்தி வார இதழான, பிரண்ட்லைனில் டி. கே. இராசலட்சுமி கூற்றுபடி - "நாராயணன் பண்டைய வரலாற்றில் ஒரு நிபுணராகவும், "ஒரு இந்துவாகவும், ஒரு சிறந்த பாரம்பரியத்தின் வாரிசாகவும் இருக்கும் அளவிற்கு இந்துத்துவத்தை நம்புபவர்". இவர் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமாக இருந்தாலும், இவர் ஒரு தீவிரபோக்குள்ளவர் அல்ல" என்று கூறுகிறார். இதற்கு பதிலாக "வேறுபாடுகள் இல்லாமல் வரலாறு இருக்க முடியாது" என்று நாராயணன் கூறினார். [6]

நாராயணன் 26 ஏப்ரல் 2025 அன்று தனது 92 வயதில் இறந்தார்.[8]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads