ஏ-7 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-7 பெருந்தெரு என்பது இலங்கையின் அவிசாவளையில் தொடங்கி நுவரெலியா நகரில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும். இது 118.7 கிலோமீட்டர் நீளமானது.[1] இது இலங்கையின் தேயிலை துறையின் முக்கிய நகரங்களை இலங்கையின் வர்த்தக மையங்கள் காணப்படும் கொழும்பு தேர்தல் மாவட்டத்துடன் இணைப்பதால் பொருளாதார ரீதியில் முக்கியத்துவமான பெருந்தெருவாகும். ஏ-7 பெருந்தெரு மலையக மக்கள் கொழும்பை அடைவதற்காக பயன்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். அவிசாவளை நகரில் ஏ-4 பெருந்தெருவுடனான சந்தியில் ஆரம்பிக்கும் இப்பெருந்தெருவின் நீள கணக்கீடும் இச்சந்தியில் இருந்தே ஆரம்பிக்கிறது. பின்னர் முறையே கரவனல்லை, எட்டியாந்தோட்டை, கித்துள்கலை, கினிகத்தனை, வட்டவளை, அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, லிந்துலை, நானு ஓயா போன்ற சிறிய, பெரிய நகரங்கள் ஊடாக நுவரெலியாவை அடைகிறது.
Remove ads
அமைப்பு
அவிசாவளை தொடக்கம் கரவனல்லை வரையான பகுதி 3.5 மீற்றர் அகலமான இரண்டு பாதைகள் (லேன்) கொண்டதாகவும் கரவனல்லை முதல் அட்டன் வரையான பகுதி ஒருபாதையை கொண்டதாகவும் இரட்டை மேற்பரப்பு பிட்டுமன் பராமரப்பு முறையை (காபட்) கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அட்டன் முதல் நுவரெலியா வரையான பகுதி ஒருபாதையை கொண்டுள்ளதோடு ஒற்றை பிட்டுமன் பராமரிப்பு முறையைக் கொண்டுள்ளது.
அவிசாவளை முதல் எட்டியாந்தொட்டை வரை மட்டமான வீதியாக காணப்படும் ஏ-7 பெருந்தெரு அதன் பிறகு தொடர்ச்சியான மேல் நோக்கிய ஏற்றத்தைக் கொண்டுள்ளது. இது கினிகத்தனை கணவாயூடாக மத்திய மலைநாட்டில் நுழைகிறது. அவிசாவளையில் கடல் மட்டத்தில் இருந்து 100 மீட்டர் சற்றே குறைவான (300 அடி) உயரத்தைக் கொண்டுள்ள ஏ-7 பெருந்தெரு நுவரெலியாவை அடையும் போது 2000 மீட்டர் (6000 அடியை) அடைகிறது.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads