ஐந்தாம் தாலமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐந்தாம் தாலமி (Ptolemy V Epiphanes)[note 1] (கிரேக்கம்: Πτολεμαῖος Ἐπιφανής Εὐχάριστος, பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவார். பார்வோன் நான்காம் தாலமிக்கு பிறந்த ஐந்தாம் தாலமி, எகிப்தை கிமு கிமு 204 முதல் கிமு 180 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் கிமு 196ல் எகிப்திய மொழி மற்றும் கிரேக்க மொழியில் தனது கட்டளைகளைக் கொண்ட ரொசெட்டா கல்வெட்டு ஒன்றை நிறுவினார்.

ஐந்தாம் தாலமியின் பட்டத்தரசி முதலாம் கிளியோபாட்ரா, கிரேக்க செலூக்கியப் பேரரசர் மூன்றாம் ஆந்தியோசூசின் மகள் ஆவார். இவரது குழந்தைகள் ஆறாம் தாலமி, எட்டாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ரா ஆவார்.
Remove ads
சிரியப் போர் (கிமு 202-196)
கிமு 202-இல் செலூக்கியப் பேரரசர் மூன்றாம் ஆந்தியோசூஸ், எகிப்தின் ஆளுகைக்குள் இருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகரத்தைக் கைப்பற்றியதுடன், மேலும் கிமு 201-இல் சிசிலி, பாலஸ்தீனம் மற்றும் காசா நகரங்களையும் கைப்பற்றினார். கிமு 196-இல் ஆந்தியோசூஸ் வென்ற எகிப்திய பகுதிகளை மீண்டும் கைப்பற்றி எகிப்துடன் இணைத்தார்.
எகிப்தியக் கிளர்ச்சி (கிமு 204-196)
ஐந்தாம் தாலமியின் இறுதி ஆட்சிக் காலத்தின் போது கிமு 204 முதல் கிமு 196 முடிய, தெற்கு எகிப்தின் தீபை நகரத்தில் உள்ளூர் எகிப்திய மக்கள், கிரேக்க தாலம் வம்ச ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்தனர்.[2][3]
கிமு 199-இல் அபிதோஸ் மற்றும் தீபை நகரங்கள் உள்ளூர் எகிப்திய கிளர்ச்சியார்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. கிமு 196-இல் கிளர்ச்சியாளர்களை மெம்பிஸ் நகரத்திற்கு அழைத்துச் செல்லபப்ட்டு பொது இடத்தில் வைத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.[4]
Remove ads
இதனையும் காண்க
குறிப்புகள்
- வார்ப்புரு:Ptolemy
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads