கசானவித்து வம்சம்

From Wikipedia, the free encyclopedia

கசானவித்து வம்சம்
Remove ads


கசானவித்து வம்சம் (Ghaznavid dynasty) (Persian: غزنویان ġaznaviyān) கசானவித்துகள் பாரசீக சமூகத்தைச் சேர்ந்தவர்கள். [5] துருக்கி இசுலாமிய மம்லூக் எனும் அடிமை வம்ச மக்களின் வழித்தோன்றல்களே கசானவித்துகள் ஆவார்.[6]. கசானவித்துகள் புகழின் உச்சத்தில் இருந்த போது, 977 முதல் 1186 முடிய தற்கால, ஈரான், ஆப்கானித்தான், நடு ஆசியாவின் திரான்சாக்சியானா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை ஆண்டனர். [7][8][9]

விரைவான உண்மைகள் غزنویان, தலைநகரம் ...

சமானித்து பேரரசில் படைத்தலைவராக இருந்த சபுக்திஜின் என்பவர், தற்கால ஆப்கானித்தானின் கசினி மாகாணத்தில், கிபி 977-இல் கசானவித்து வம்சத்தை நிறுவினார். [10] இவ்வம்சத்தினர் நடு ஆசியாவை சேர்ந்த மக்களாக இருந்த போதும், இவர்கள் பாரசீக மொழி, பண்பாடு மற்றும் நாகரீகங்களைப் பின்பற்றினர். இம்வம்ச மன்னர்களில் புகழ் பெற்றவர் கசினி முகமது ஆவார். இவ்வம்சத்தவர்களில் தலைநகரங்களாக கஜினி மற்றும் லாகூர் இருந்தது.

Remove ads

கசானவித்து வம்ச ஆட்சியாளர்கள்

  • சபுக்திஜின் - 977–997
  • இஸ்மாயில் 997–998
  • கசினி முகமது - 998–1030
  • முதலாம் மசூத் - 1030–1041
  • சிகாப் உத்தௌலா - 1041–1048
  • கசினியின் அலி - 1048–1049
  • அப்துல் ரசீத் - 1049–1052
  • தோக்ரூல் - 1052–1053
  • பரூக்-சத் - 1053–1059
  • இப்ராகிம் -1059–1099
  • மூன்றாம் மசூத் - 1099–1115
  • சிராஜ் - 1115–1116
  • அர்ஸ்லான் இபின் மசூத் - 1116–1117
  • பக்ரம் ஷா - 1117–1157
  • குஷ்ரௌ-ஷா - 1157–1160
  • குஸ்ரௌ மாலிக் - 1160–1186

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads