கண்டகி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்டகி மண்டலம் (Gandaki Zone) (நேபாளி: गण्डकी अञ्चलⓘ) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். கண்டகி மண்டலம் தென்மத்திய நேபாளத்தில் அமைந்துள்ளது. இம்மண்டலம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ளது. நாட்டின் தலைநகரான காட்மாண்டிலிருந்து நூற்றி இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொக்காரா நகரம் காஸ்கி மாவட்டம், மேற்கு வளர்ச்சி வளர்ச்சி பிரந்தியம் மற்றும் கண்டகி மண்டலம் ஆகியவற்றின் தலைமையிடமாகும். இம்மண்டலம் ஆறு மாவட்டங்களும், இருநூற்றி தொன்னூற்றி இரண்டு கிராம வளர்ச்சி மன்றங்களும், ஆறு நகராட்சி மன்றங்களும் கொண்டது. நேபாளத்தின் முதல் மகாகவிஞர் பானுகுப்த ஆச்சாரியா இம்மண்டலத்தில் பிறந்தவர்.

Remove ads
பெயர்க் காரணம்
இம்மண்டலத்தில் பாயும் ஆறுகளான காளி கண்டகி, திரிசூலி, புத்தி கண்டகி, மர்சியாந்தி, மடி, சேத்தி கண்டகி மற்றும் தரௌதி எனப்படும் சப்த கண்டகி ஆறுகளால் கண்டகி ஆறு உருவானதால், இம்மண்டலத்திற்கு கண்டகி மண்டலம் எனப்பெயராயிற்று.
மாவட்டங்கள்
தென்மத்திய நேபாளத்தில் அமைந்த இம்மண்டலத்தில் ஆறு மாவட்டங்கள் அமைந்துள்ளது. மண்டலத்தின் மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளில் கோர்க்கா மாவட்டம், காஸ்கி மாவட்டம், லம்ஜுங் மாவட்டம், சியாங்ஜா மாவட்டம், தன்ஹு மாவட்டங்களும் மற்றும் இமயமலைப் பகுதிகளில் மனாங் மாவட்டமும் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
12,275 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது கண்டகி மண்டலம். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கண்டகி மண்டலத்தின் மொத்த மக்கள் தொகை 15,49,857 ஆகும். [1] பல்வேறு பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழிகள் சமயங்கள் வழங்கும் இம்மண்டலத்தின் மஹர் மக்கள், குரூங் மக்கள், கூர்க்கா மக்கள், நேவார் மக்கள், மகர் மக்கள், செட்டிரி மக்கள் நேபாளி மொழி, நேவாரி மொழி, காலே மொழி மற்றும் மகர் மொழிகள் பேசுகின்றனர். இம்மண்டலத்தின் இமயமலைப் பகுதி மாவட்டமான மனாங் மாவட்டத்தில் பௌத்தர்கள் அதிகம் உள்ளனர்.
சுற்றுலாத் தலங்கள்
இம்மண்டலத்தில் அன்னபூர்ணா மலை, மனாசுலு மலை, கோரக்க சித்தரின் கோயில், கோரமான காளி கோயில் மற்றும் மனகாமனா கோயில் அமைந்துள்ளது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
இம்மண்டலத்தில் ஆறு மாவட்டங்களும், 292 கிராம வளர்ச்சி மன்றங்களும், ஆறு நகராட்சி மன்றங்களும் உள்ளது. கண்டகி மண்டலம் மலைபபாங்கான குன்றுப் பகுதிகளும் மற்றும் இமயமலை பகுதிகளையும் கொண்டது. இம்மண்டலத்தின் வடக்கு எல்லையாக சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி உள்ளது. இம்மண்டலத்தின் நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [2]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads