மேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேற்கு வளர்ச்சி பிராந்தியம் (Western Development Region) (நேபாள மொழி: पश्चिमाञ्चल विकास क्षेत्र, பஸ்ச்சிமாஞ்சல்), தெற்காசியாவின் நேபாளத்தின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காக நேபாளத்தை ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளத்தின் மத்திய மேற்கு நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் நிர்வாகத் தலைமையிடம், கண்டகி மண்டலத்தில் அமைந்த காஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா நகரம் ஆகும்.
Remove ads
மக்கள் தொகையியல்
29,398 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு பிராந்தியத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 49,26,765 ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 167.59 நபர்கள் என்ற அளவில் உள்ளது. பல்வேறு மொழிகள் பேசும் இன மக்களைக் கொண்டுள்ள மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், நேபாள மொழி, அவதி மொழி, லிம்பு மொழி, ராஜ்பன்சி, நேவாரி மொழி, ராய் மொழி, தமாங் மொழி, மஹர் மொழி, செபாங் மொழி, சுனுவார் மொழி மற்றும் திபெத்திய மொழிகள் பேசப்படுகிறது. மேற்கு பிராந்தியத்தின் வடக்கின் இமயமலைப் பகுதிகளில் திபெத்தியர்கள் மற்றும் உள்ளூர் மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
Remove ads
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
புவியியல்
நேபாளத்தின் புவியியல் அமைப்புப் படி, 29,398 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு பிராந்தியத்தின் தெற்கில் தராய் சமவெளி, நடுவில் மலைப்பாங்கான பகுதி, வடக்கில் இமயமலைப் பகுதி என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள்து. மேற்கு பிராந்தியத்தின் வடக்கில் இமயமலையில் பனி படர்ந்த தவளகிரி, தாமோதர், பேனி, தாப்லே, கணேஷ் மலைத் தொடர்கள் அமைந்துள்ளது. கண்டகி ஆறு, திரிசூலி ஆறுகள் இப்பிராந்தியத்தின் முக்கிய ஆறுகளாம்.
தட்ப வெப்பம்
மேற்கு பிராந்தியத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஏழு நிலைகளில் காணப்படுகிறது. [1]
Remove ads
எல்லைகள்
மேற்கு பிராந்தியம் வடக்கில் சீனாவின் திபத் தன்னாட்சிப் பகுதியும், கிழக்கில் மத்திய வளர்ச்சி பிராந்தியமும், தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலமும், மேற்கில் மத்திய வளர்ச்சி பிராந்தியமும் எல்லைகளாகக் கொண்டது.
நிர்வாக அமைப்பு
நிர்வாக வசதிக்காக மேற்கு வளர்ச்சி பிராந்தியம் தவளகிரி மண்டலம், கண்டகி மண்டலம் மற்றும் லும்பினி மண்டலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று மண்டலங்களில் கோர்க்கா மாவட்டம், காஸ்கி மாவட்டம், லம்ஜுங் மாவட்டம், சியாங்ஜா மாவட்டம், தனஹு மாவட்டம், மனாங் மாவட்டம், கபிலவஸ்து மாவட்டம், நவல்பராசி மாவட்டம், ரூபந்தேஹி மாவட்டம், அர்காகாஞ்சி மாவட்டம், குல்மி மாவட்டம், பால்பா மாவட்டம், பாகலுங் மாவட்டம், மியாக்தி மாவட்டம், பர்பத் மாவட்டம் மற்றும் முஸ்தாங் மாவட்டம் என பதினாறு மாவட்டங்கள் உள்ளது.
Remove ads
சிறப்புகள்
மேற்கு பிராந்தியத்தின் வடக்கில் உள்ள இமயமலை பகுதியில் அன்னபூர்ணா (8,091 மீட்டர்கள்), தவளகிரி (8,167 மீட்டர்கள்) போன்ற உயரமான மலைகள் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads