சாபுல் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாபுல் (Zabul (பாரசீகம் மற்றும் பஷ்தூ: زابل) என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள முப்பத்து நான்கு மாகாணங்களில் ஒன்று. இந்த மாகாணமானது நாட்டின் தெற்கில் உள்ளது. பெரும்பாலும் கிராமப்புறங்களைக் கொண்ட இந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையானது 289,300 ஆகும். சாபுல் மாகாணமானது 1963ஆம் ஆண்டு அண்டை மாகாணமான காந்தகார மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாகாணமாக உருவானது. வரலாற்று ரீதியாக, இது ஜாபலிஸ்தான் வட்டாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மாகாணத்தின் தலைநகராக கலாட் நகரம் உள்ளது.
Remove ads
நிலவியல்

சாபுல் மாகாணத்தின் எல்லைகளாக வடக்கில் ஒரூஸ்கான் மாகாணம் , மேற்கில் கந்தகார் மாகாணம் ,தெற்கில் கஜினி மாகாணம் , கிழக்கில் பாக்டிகா மாகாணம் மற்றும் சர்வதேச எல்லையான பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தானின் சோவ் மாவட்டம் உள்ளது. சில நேரங்களில் பாக்கித்தான் எல்லைக்குள் உள்ள பலுச்சிசுத்தானமானது சாபுல் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியாக கருதப்படுகிறது.
மாகாணமானது 17293 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாகாணமானது ஐந்தில் இரண்டு பங்கு மலைப்பகுதி அல்லது அரை மலைப்பகுதி (41%) ஆகும். கால்பங்கு நிலத்துக்கு சற்று மிகுதியான பரப்பு (28%) சமவெளியாகும்.
இந்த மாகாணத்தை சூழ்ந்ததாக நடு ஆப்கான் மலை வறண்ட மரக்காடுகள் உள்ளன. இந்த உலர் புதர் காடுகளில் பசுங்கொட்டை உள்ளிட்டவை விளைகின்றன. மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உயர்ந்த மலைப்பகுதியின் கோர்-ஹஜராஜத் அல்பைன் புல்வெளி மண்டலம் உள்ளது.[4]
Remove ads
அரசியலும், நிர்வாகமும்
மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் பிஸ்மில்லாஹ் ஆப்கானல் ஆவார். மாகாணத்தின் தலைநகரமாக கலாட் நகரம் உள்ளது. மாகாணம் முழுவதுமான அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. சாபுல் மாகாணத்தை ஒட்டியுள்ள பாக்கித்தானின் பாலுச்சிஸ்தான் மாகாண எல்லைப் பகுதியை ஆப்கானிய தேசிய காவல்துறையின் (ஏஎன்பி) ஒரு பிரிவான ஆப்கானிய எல்லை பொலிசால் (ஏபிபீ) கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
மாகாணமானது தலிபான்களின் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்களுக்கு இடையில். குறிப்பாக என்.ஜி.ஓ.க்களின் ஆசிரியர்களைத் தக்க வைத்துக் கொண்டது.
Remove ads
போக்குவரத்து
2006 ஆம் ஆண்டு, மாகாணத்தில் முதல் தற்காலிக வானூர்தி இறங்குதளமானது கலாட்க்கு அருகே திறந்து வைக்கப்பட்டது. இது ஆப்கானிய தேசிய இராணுவத்தால் இயக்கப்படுகிறது. ஆனால் இதை வர்த்தக விமானங்கள் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. கலாட் மற்றும் காபூலுக்கு இடையே பிஆர்டி ஏர் விமானங்களை வாரம் இருமுறை இயக்க திட்டமிடப்பட்டது.[5][6]
காபூல் மற்றும் காந்தாரம் ஆகியவற்றை இணைக்கும் 1 என்ற எண்கொண்ட நெடுஞ்சாலையானது மாகாணத்தைக் கடந்து செல்கின்றது.[7]
2016 செப்டம்பர் 4 அன்று நடந்த ஒரு சாலை விபத்தில் குறைந்தது 38 பேர் இறந்தனர் மற்றும் 28 பேர் காயமடைந்தனர்.
நலவாழ்வு பராமரிப்பு
இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 0% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 23% என உயர்ந்துள்ளது.[8] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 1 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 5 % என உயர்ந்தது.
கல்வி

மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 1% என்று இருந்தது. 2011 இல் இது 19% என உயர்ந்துள்ளது.
மக்கள்வகைப்பாடு


மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 289,300 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பல இன மக்களைக் கொண்டதாகவும், பெரும்பாலும் கிராமப்புறமாகவும் உள்ளது.[9] கடற்படை முதுநிலை பட்டப்படிப்பு பள்ளியின் ஆய்வின்படி, மாகாணமக்களில் பிரதானமாக பஷ்தூன் மக்கள் உள்ளனர். இவர்கள் சுமார் 2,500 தொலைதூர கிராமங்கள் முழுவதும் பரவி வாழ்கின்றனர்.
பஷ்தூ மொழி இப்பகுதியில் ஆதிக்கம் செய்யும் மொழியாக உள்ளது. சாபுல் மாகாண மக்களில் மிகப்பெருமளவில் சுன்னி முஸ்லீம்கள் உள்ளனர். இந்த மாகாண மக்களின் முதன்மைப் பணியாக வேளாண்மை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும்.[10]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads