கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கருங்குழி, (Karunguzhi) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். கருங்குழியில் உள்ள ரங்கநாதர் மலை சிறப்புப் பெற்றது.
Remove ads
அமைவிடம்
சென்னை - திருச்சி வழித்தடத்தில் அமைந்த கருங்குழி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் கருங்குழியில் உள்ளது. இதன் கிழக்கில் திருக்கழுகுன்றம் 24 கி.மீ.; மேற்கில் உத்திரமேரூர் 22 கி.மீ.; வடக்கில் செங்கல்பட்டு 22 கி.மீ.; தெற்கில் மதுராந்தகம் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 98 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,075 வீடுகளும், 12,485 மக்கள்தொகையும் கொண்டது.
மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.65% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
சிறப்புகள்
கருங்குழி பேரூராட்சி, தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசை 15 ஆகத்து 2022 அன்று பெற்றது.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads