காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடம் (The Kashi Vishwanath Temple Corridor) தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயர் ஆட்சிகளுக்கு முன்னர் பொழிவுடன் இருந்தவாறு காசி விஸ்வநாதர் கோயிலை மீண்டும் பொழிவுறச் செய்வதற்கு இத்தாழ்வாரத் திட்டத்திற்கு மார்ச், 2019-ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.[1][2] தற்போது குறுகிய தெருவில் அமைந்த காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதற்கு பல குறுகிய தெருக்களைக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது. சாதரண நாட்களில் இக்கோயிலுக்கு 10,000 முதல் 30,000 பக்தர்கள் வருகை தருகின்றனர். மகா சிவராத்திரி, காவடி யாத்திரை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை, கும்பமேளா போன்ற பெருநாட்களின் போது இக்கோயிலுக்கு நாளொன்றுக்கு 3 இலட்சம் முதல் 10 இலட்சம் பக்தர்கள் வருகை தருவர்.
இப்புதிய தாழ்வாரத் திட்டத்தில் காசி விஸ்வநாதர் கோயிலையும், வாரணாசியில் பாயும் கங்கை ஆற்றின் மேற்கு கரையில் அமைந்த லலிதா படித்துறையுடன் இணைக்கும் சாலை 50 அடி அகலத்துடன் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் 600 கோடி ரூபாய் செலவில் 8 மார்ச் 2019 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நடைபாதையின் பரப்பளவு 50,261 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இத்தாழ்வாரத் திட்டத்தில் 24 புதிய கட்டிடங்கள் கட்டவும் மற்றும் 63 கோயில்கள் மறுசீரமைப்பு செய்யப்படவும் உள்ளது. மேலும் இத்திட்டத்தால் 314 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு காசியில் குடியிருக்க வேறு இடங்கள் தரப்படவுள்ளது. இத்திட்டம் 2021-ஆம் ஆண்டில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கான 1,500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.[3]
இத்தாழ்வாரத் திட்டத்தில் கோயிலிருந்து நேராக கங்கை படித்துறைக்கு செல்லும் வசதி, பக்தர்கள் & ஊழியர்கள் தங்கும் விடுதிகள், பக்தர்களின் பொருட்களை பாதுகாக்கும் அறைகள், வேத பாடசாலைகள், குடி நீர் & வடிகால் மற்றும் துப்பரவு வசதிகள், சாலை வசதிகள் மேம்படவுள்ளது.
மேலும் இத்தாழ்வாரத் திட்டத்திற்கு வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தங்களின் 1,700 சதுர அடி பரப்புள்ள நிலத்தை வழங்கியுள்ளனர்.[4][5] கொரானா பெருந்தொற்று காரணமாக இத்திட்டம் மெதுவாக செயல்படுகிறது.
Remove ads
தாழ்வாரத்தின் முதல் கட்டத் திறப்பு விழா
காசி விஸ்வநாதர் கோயில் தாழ்வாரத்தின் முதல் கட்டத் திறப்பு விழா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13 டிசம்பர் 2021 அன்று துவக்கி வைத்தார்.[6][7][8]
வரலாறு
முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆணையால் காசி விஸ்வநாதர் கோயில் 17-ம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது. இடித்த இடத்தில் ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டது. பின்னர் பள்ளிவாசலின் மேற்கு சுவரை ஒட்டிய பகுதியில் காசி விஸ்வநாதர் கோயிலை மராட்டியப் பேரரசின் இந்தூர் இராணி அகில்யாபாய் ஓல்கர், பொ.ஊ. 1780-இல் கட்டி எழுப்பினார். மேலும் 2014 மக்களவைத் தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக காசி விஸ்வநாதர் கோயிலை அனைத்து வசதிகளுடன் விரிவாக்கம் செய்வதாக வாக்களித்தது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads