காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம்
சிலாங்கூர், காஜாங் அரங்கத்தின் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Stadium Kajang MRT Station; மலாய்: Stesen MRT Stadium Kajang) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங், காஜாங் விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப் பகுதிகளுக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம் சுங்கை பூலோ காஜாங் வழித்தடத்தில் (Sungai Buloh-Kajang Line) (SBK Line) காஜாங் நோக்கிச் செல்லும் இரண்டாவது முதல் கடைசி நிலையம் ஆகும். லங்காட் ஆற்றின் வலது புறத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் காஜாங் அரங்கத்திற்கு (Kajang Stadium) அருகிலும் உள்ளது. மேலும்
செமினி கூட்டரசு நெடுஞ்சாலை 1 மற்றும்
B17 ரெக்கோ சாலை ஆகியவற்றுக்கு இடையிலான பரிமாற்றச் சாலை சந்திப்பிற்கு அருகிலும் உள்ளது.
கட்டுமானத்தின் போது, இந்த நிலையத்திற்கு பண்டார் காஜாங் நிலையம் (Bandar Kajang Station) என்று பெயரிடப்பட்டது. அப்போது காஜாங் நகரத்திற்கும்; காஜாங் நிலையத்திற்கும் பண்டார் காஜாங் நிலையம் சேவை செய்தது. அப்போது அந்த நிலையம் நேரடியாக காஜாங் நகர மையத்திற்குச் சேவை செய்யவில்லை. அதன் பின்னர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. காஜாங் நகரத்திற்கு தற்போது சேவை செய்யும் இரண்டு நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்; மற்றொன்று சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் ஆகும்.
Remove ads
காஜாங் வழித்தடம்
9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[1]
Remove ads
பொது
9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் - காஜாங் தொடருந்து நிலையம் வரையில் கட்டப்பட்ட 19 நிலையங்களில் காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும்; 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[2] காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் காஜாங் விளையாட்டு அரங்கத்திற்கும்; காஜாங் புறநகர்ப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.[3]
Remove ads
நிலைய அமைப்பு
இந்த நிலையம், காஜாங் எம்ஆர்டி வழிதடத்தின் பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை உள்ளது.
இரட்டை வழித்தடங்களிலும் இரண்டு பக்க நடைமேடைகள் உள்ளன; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகளும் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
L2 | நடைமேடை | பக்க நடைமேடை |
நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் தொடருந்து KG35 (→) | ||
நடைமேடை 2 9 காஜாங் (→) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
பக்க நடைமேடை | ||
L1 | இணைப்புவழி | கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் C |
G | தரை மட்டம் | நுழைவாயில்கள் A, B, C (→) ஊட்டி பேருந்து மையம் (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) காஜாங் அரங்கம் (→) காஜாங் அரங்க சாலை |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையதில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. நிலையத்தின் ஊட்டி பேருந்துகள் மையத்திலிருந்து (Feeder Buses Hub) காஜாங் அரங்க சாலையில் உள்ள நுழைவாயில் A வழியாக ஊட்டி பேருந்துகள் (Feeder Bus) இயக்கப்படுகின்றன.
Remove ads
பேருந்து சேவைகள்
Remove ads
பிற பேருந்து சேவைகள்
காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் வேறு சில பேருந்து சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.
Remove ads
காட்சியகம்
காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் (2023)
மேலும் காண்க
- பிரசரானா மலேசியா
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
- கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
- எம்ஆர்டி நிறுவனம்
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
- 9 காஜாங் (MRT1)
- 12 புத்ராஜெயா (MRT2)
- 13 சுற்று வழித்தடம் (MRT3)
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads