காராங்கசெம் பிராந்தியம்

இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் From Wikipedia, the free encyclopedia

காராங்கசெம் பிராந்தியம்
Remove ads

காராங்கசெம் பிராந்தியம் (ஆங்கிலம்: Karangasem Regency; பாலினியம்: Kabupatén Karaṅasĕm; இந்தோனேசியம்: Kabupaten Karangasem) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் அமலாபுரம் (Amlapura).[1] காராங்கசெமின் ஆட்சிப் பகுதி "பாலியின் ஆன்மீக உணர்வு" என்று அறியப்படுகிறது. பாலியின் தாய் கோயிலான பெசாகி கோயில் மற்றும் பாலியின் பல பெரிய கோயில்கள் இந்தப் பிராந்தியத்திதான் அமைந்துள்ளன.[4]

விரைவான உண்மைகள் காராங்கசெம் பிராந்தியம் Karangasem Regency Kabupaten Karangasem ᬓᬩᬸᬧᬢᬾᬦ᭄ᬓᬭᬂᬳᬲᭂᬫ᭄, நாடு ...

பாலி தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காராங்கசெம் பிராந்தியம் 839.54 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது; மற்றும் 2024-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 536477 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.[2] கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் கோயில்களைக் கொண்ட காராங்கசெம்; பாலி தீவின் மிகப்பெரிய செயல்நிலை எரிமலையான அகோங் மலை அமைந்துள்ள பசுமை நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.[4]

1963-ஆம் ஆண்டு அகோங் மலை வெடித்து 1,900 பேர் கொல்லப்பட்டபோது காராங்கசெம் பேரழிவிற்கு உள்ளானது. பாலி தீவை இடச்சுக்காரர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு காராங்கசெம் ஓர் இராச்சியமாக இருந்தது.

Remove ads

பொது

துக்கட் உண்டா ஆறு காராங்கசெம்; மற்றும் சுற்றியுள்ள பிற நகரங்களின் குறுக்கே பாய்கிறது. இந்த ஆறு பெரும்பாலும் நெல் வயல் நீர்ப் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. காராங்கசெமில் சுபாக் நீர்ப்பாசன அமைப்புகள் (Subak); 135 நீர் சுபாக்கள் (subak yeh); மற்றும் 158 தோட்ட சுபாக்கள் (subak abian) செயல்பாட்டில் உள்ளன.[5] காராங்கம் பிராந்தியத்தின் கடற்கரை 87 கி.மீ நீளம் கொண்டது. அவற்றில் சில கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவையாக உள்ளன.[6]

Remove ads

வரலாறு

காராங்கசெம் இராச்சியம் 1600-ஆம் ஆண்டு பாலி தீவில் உருவான ஓர் இந்து இராச்சியமாகும். அதன் உச்சக்கட்ட காலத்தில், இந்த இராச்சியம் லொம்போக் தீவு வரை பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. 1894-இல் இடச்சுக்காரர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்த பிறகு, காராங்கசெம் இடச்சு கிழக்கிந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இந்தோனேசியா குடியரசு விடுதலை அடைந்த பிறகு, காராங்கசெம் இராச்சியம், இந்தோனேசிய அரசாங்கத்தின் கீழ் இரண்டாம் நிலை ஆட்சிப் பகுதியாக மாறியது.

காராங்கா சமாதி

காராங்கசெம் இராச்சியம் நிறுவப்பட்ட வரலாற்றுக் காலத்தில் இருந்து காராங்கசெம் பிராந்தியத்தின் வரலாற்றையும் பிரிக்க முடியாது. கரங்காசெம் (Karangasem) என்ற பெயர் உண்மையில் காராங்கா சமாதி (Karang Semadi) என்ற சொல்லில் இருந்து வந்தது. காராங்கசெம் என்ற பெயரின் தோற்றத்தைக் கொண்ட சில வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கப்பெற்று உள்ளன.[7]

பாடுங் பிராந்தியத்தின் மங்குபுரம் (Mangupura) நகர்ப்பகுதியின் கெரியா மந்தாரா (Geria Mandara) கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சாடிங் சி கல்வெட்டில் (Sading C Inscription) காராங்கசெம் வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. அமலாபுரம் நகருக்கு வடகிழக்கில் உள்ள லெம்புயாங் மலைக்கு, முதலில் அட்ரி காராங் (Adri Karang) என்று பெயரிடப்பட்டது; அதாவது காராங் மலை அல்லது பவள மலை என்று பொருள்படும்.[8]

Remove ads

காராங்கசெம் இராச்சியம்

Thumb
காராங்கசெம் இராச்சியத்தின் அரசர் குஸ்தி பகூஸ் (1925)

16 - 17-ஆம் நூற்றாண்டுகளில், காராங்கசெம் இராச்சியம்; கெல்கெல் இராச்சியத்தின் கீழ் இருந்தது. காராங்கசெம் இராச்சியத்தின் மன்னர் தேவா காராங்கமலா (Dewa Karangamala) என்பவர் செலகுமி எனும் தற்போதைய பலேபுண்டுக் (Balepunduk) நகரில் வசித்து வந்தார். தேவா காராங்கமலா ஒரு கட்டத்தில் குஸ்தி ஆர்யா பாடாஞ்சேருக் (Gusti Arya Batanjeruk) என்பவரின் விதவையை மணந்தார். குஸ்தி ஆர்யா பாடாஞ்சேருக் என்பவர் காராங்கசெம் இராச்சியத்தில் ஓர் அரச ஆளுநராக இருந்தார்.[8]

குஸ்தி ஆர்யா பாடாஞ்சேருக், காராங்கசெம் இராச்சியத்தின் மன்னர் தேவா காராங்கமலாவிற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்தினார். அந்தக் கிளர்ச்சியில் குஸ்தி ஆர்யா பாடாஞ்சேருக் கொல்லப்பட்டார். பின்னர் பாடாஞ்சேருக்கின் விதவை மனைவியை, மன்னர் தேவா காராங்கமலா மணந்தார். விதவை மனைவியின் குழந்தைகள் காராங்கசெம் இராச்சியத்தின் ஆட்சியாளராக வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன் திருமணம் நடைபெற்றது..[7]

பின்னர் மன்னர் தேவா காராங்கமலாவின் குடும்பம் செலகுமி நகரில் (Selagumi) இருந்து பத்து ஆயா (Batuaya) எனும் இடத்திற்கு இடம் பெயர்ந்தது. பாடாஞ்சேருக்கின் விதவை மனைவியின் மகனிடம் காராங்கசெம் இராச்சியத்தின் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு காராங்கசெம் இராச்சியம்ம் பாடாஞ்சேருக் மரபு வழியால் (Batanjeruk Dynasty) ஆட்சி செய்யப்பட்டது.[9]

நிர்வாக மாவட்டங்கள்

காராங்கசெம் பிராந்தியம் 8 மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் நிர்வாக குறியீடு, மாவட்டம் (Kecamatan) ...
Remove ads

காலநிலை

காராங்கசெம் பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஆண்டு முழுவதும் மிதமான மழைப்பொழிவு முதல் கனமழை வரை இருக்கும்.

காட்சியகம்

  • காராங்கசெம் பிராந்திய காட்சிப் படங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads