கார்கோடகப் பேரரசு

From Wikipedia, the free encyclopedia

கார்கோடகப் பேரரசு
Remove ads

கார்கோடப் பேரரசு (Karkota Empire) (ஆட்சிக் காலம்: பொ.ஊ. 625–885) இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 625 முதல் 885 முடிய இருந்த அரசாகும்.[1]

Thumb
பேரரசர் லலிதாத்தியன் ஆட்சிக் காலத்தில் கார்கோடகப் பேரரசின் வரைபடம், எட்டாம் நூற்றாண்டு
விரைவான உண்மைகள் கார்கோடப் பேரரசு, தலைநகரம் ...
Thumb
லலிதாத்தியன் கட்டிய மார்த்தாண்ட சூரியக் கோயில், அனந்தநாக்
Thumb
1870-1873-இல் மறுசீரமைக்கப்பட்ட மார்த்தாண்ட சூரியக் கோயில், அனந்தநாக்

கார்கோட அரசை பொ.ஊ. 625-இல் நிறுவியவர் மன்னர் துர்லபவர்தனர் ஆவார்.[2] கார்கோடப் பேரரசு தற்கால இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இராஜதரங்கிணி மற்றும் லலிதாத்திய முக்தபீடம் ஆகிய சமஸ்கிருத நூல்களை இயற்றிய கல்ஹானரின் கூற்றுப்படி, பொ.ஊ. 740-இல் கார்கோட மன்னர்கள் கன்னோசி மன்னர் யசோவர்மனை வீழ்த்தி மற்றும் திபெத்தியர்களை வென்றார்கள் என அறியப்படுகிறது.[3][4]

இந்து சமயத்தவராக இருந்த கார்கோடகப் பேரரசர்கள் தலைநகர் பரிஹாஸ்பூரில் இந்துக் கோயில்களைக் கட்டினர்.[5][6]காஷ்மீர் சமவெளியின் அனந்தநாக் நகரத்தில் சூரியக் கடவுளான மார்த்தாண்டனுக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டது. [7][8] மேலும் தமது பேரரசில் பௌத்த சமயத்தின் தூபிகள், விகாரைகள் எழுப்ப அனுமதித்தனர்.

Remove ads

வீழ்ச்சி

பொ.ஊ. 885-இல் அவந்தி நாட்டு உத்பால வம்சத்தின் மன்னர் அவந்திவர்மன், கார்கோடப் பேரரசை வீழ்த்தினார்.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads