பண்டமாரான்
கிள்ளான் மாவட்டத்தில் ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டமாரான் (மலாய்; ஆங்கிலம்: Pandamaran; சீனம்: 班达马兰) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு சட்டமன்றத் தொகுதியும் ஆகும். இந்த நகரம் கிள்ளான் துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ளது. தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனை; மற்றும் பண்டார் புக்கிட் திங்கி நவீன நகர்ப்புறம் போன்ற முக்கியமான இடங்கள் இந்த நகரத்திற்கு அருகிலும் உள்ளன.
பண்டமாரான் நகரம் அடிப்படையில் ஒரு சீனர் கிராமப் பகுதியாகும். இந்த நகரம் சிறந்த சாலை இணைப்புகளால் சேவை செய்யப்படுகிறது. அரச நகரமான கிள்ளானில் உள்ள முக்கிய தொழில்துறை மண்டலங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.
Remove ads
வரலாறு

மலாயா அவசரகால நிலைக்குப் பிறகு பிரித்தானிய மலாயாவில் 1950-ஆம் ஆண்டு பண்டமாரான் புதிய கிராமம் (Kampung Baru Pandamaran) உருவாக்கப்பட்டது. மலாயா புதுக்கிராமங்கள் என்பது மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றத் திட்டமாகும்.[2].
1950-ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம், மலாயாவில் பரவலாகி வந்த பொதுவுடைமை செல்வாக்கை அழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டது. அதனால் பண்டமாரான் கிராமப் பகுதிகளில் வசித்த சீனர் குடியிருப்பாளர்கள் அனைவரையும் பண்டமாரான் புதிய கிராமத்தில் குடியேற்றம் செய்தது. அவர்களில் பலர் கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
தற்போது, பண்டமாரானில் ஒரு 3-நட்சத்திர விடுதி, ஒரு விளையாட்டு வளாகம், ஒரு வளைதடி பந்தாட்ட திடல், மருத்துவமனைகள், குழந்தைகள் விளையாட்டு திறந்தவெளிப் பகுதிகள், பொது நீச்சல் குளம் மற்றும் ஒரு காவல் நிலையம் உள்ளன. பண்டமாரான் நகர்ப்பகுதி, கிள்ளான் அரச நகராட்சியின் (Majlis Bandaraya Diraja Klang) அதிகார வரம்பிற்குள் வருகிறது.[3]
Remove ads
அரசியல்

2022-ஆம் ஆண்டு தொடங்கி மலேசிய மக்களவையில்; கிள்ளான் மக்களவைத் தொகுதியில் பண்டமாரான் பிரதிநிதிக்கப்படுகிறது. தற்போது மாண்புமிகு கணபதிராவ் விருமன் என்பவர் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில், 2018 முதல் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினராக டோனி லியோங் டக் சீ என்பவர் உள்ளார்.
போக்குவரத்து
சா ஆலாம் விரைவுச்சாலையின் மேற்கு முனையமாக பண்டமாரான் உள்ளது. கிள்ளான்-பந்திங் நெடுஞ்சாலை; மலேசிய கூட்டரசு சாலை 5 பண்டமாரான் நகரத்தின் கிழக்கு எல்லையில் செல்கிறது.
கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம் மற்றும் கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம் ஆகியவை அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads