மாரி, சிரியா

ஆசியாவின் முன்னாள் நாடு From Wikipedia, the free encyclopedia

மாரி, சிரியாmap
Remove ads

Script error: The module returned a nil value. It is supposed to return an export table. மாரி நகர இராச்சியம் (Mari, தற்கால Tell Hariri, அரபி: تل حريري) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில், தற்கால சிரியாவின் கிழக்கு எல்லையில், கிழக்கு செமிடிக் மொழி பேசிய, பண்டைய நகர இராச்சியம் ஆகும். இந்நகரத்தின் சிதிலங்கள் சிரியாவின் டெல் அரிரி தொல்லியல் களத்தில் காணப்படுகிறது. தெற்கில் பாபிலோனுக்கும், மேற்கில் லெவண்ட் பகுதிகளுக்கு இடையே அமைந்த மாரி இராச்சியம், கிமு 2900 முதல்கிமு 1759 முடிய 1141 ஆண்டுகள் செழிப்புடன் விளங்கியது. சுமேரியா நாகரீகத்தின் மேற்கு நுழைவாயில் என மாரி நகரம் அழைக்கபப்ட்டது.

கிமு 26ம் நூற்றாண்டின் நடுவில் அழிக்கப்பட்ட மாரி நகரம், கிமு 2500ல் மீண்டும் சீரமைக்கபப்ட்டது. மாரி நகர இராச்சியத்தினர், எப்லா இராச்சியத்தினருடன் கடும் பகை கொண்டிருந்தனர். மாரி நகரம் கிமு 23ம் நூற்றாண்டில், அக்காடியப் பேரரசால் கைப்பற்றப்பட்டு, அக்காதிய இராணுவ படைத்தலைவர்களால் கிமு 19ம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. பின்னர் கிமு 1761ல் மாரி நகரம், பாபிலோனியோ இராச்சியத்துடன் இணைக்கப்பட்டு, அசிரியர்களாலும், பாபிலோனிலோனியர்களாலும் ஆளப்பட்டது. கிமு 4ம் நூற்றாண்டில் ஹெலனியக் காலத்தில் கிரேக்கர்களால் மாரி நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது.

மாரி நகர இராச்சிய மக்கள் சுமேரிய கடவுள்களை வணங்கினர். மேற்கு செமிடிக் மொழிகள் பேசிய அமோரிட்டு மக்கள் மாரி நகரத்தில் கிமு 21ம் நூற்றாண்டிற்கு முன்னர் தங்கள் குடியிருப்புகளை நிறுவினர். கிபி 1933களில் மாரி நகரத்தின் தொல்லியல் களங்களை அகழாய்வு செய்தனர். மாரி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட 25,000 களிமண் பலகைகளில், கிமு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாரி நகர ஆட்சி நிர்வாகம், அண்டை நாடுகளுடன் கொண்டிருந்த இராஜதந்திர உறவுகள் எடுத்துரைக்கிறது. மாரி நகர இராச்சியத்தினர் கிமு 1800ல் சைப்பிரசு, கிரீட் போன்ற மத்தியதரைக் கடல் தீவு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் கொண்டிருந்த வணிக உறவுகள் சுட்ட களிமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது

Remove ads

பெயர்க் காரணம்

மெசொப்பொத்தேமியா மக்கள் வழிபட்ட மெர் என்ற புயல் தேவதையின் பெயரால் இந்நகரத்திற்கு மாரி எனப்பெயராயிற்று.[1] [2]

வரலாறு

முதலாம் மாரி இராச்சியம்

Thumb
மாரி நகர இராச்சியத்தின் நிலப்பரப்புகள்

முதலில் சிற்றரசாக இருந்த முதலாம் மாரி நகர இராச்சியம் படிப்படியாக வளர்ந்து,[3] கிமு 2900ல் பெரிய நகர இராச்சியமாக உருவெடுத்தது. இக்காலத்தில் மாரி இராச்சியத்தினர் லெவண்ட் மற்றும் தெற்கின் சுமேரியாவின் வணிகப் பாதைகளை இணைக்கும் யூப்பிரடீஸ் ஆற்றுப் பகுதிகளை கைப்பற்றினர். [3][4]

மாரி இராச்சியத்தினர் , யூப்பிரடீஸ் ஆற்றிற்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மாரி எனும் நகரத்தை அமைத்தனர்.[3] மாரி நகரம் கிமு 2550ல் அழிந்த காரணம் அறியப்படவில்லை.[4]

இரண்டாம் மாரி இராச்சியம்

Script error: The module returned a nil value. It is supposed to return an export table.

கிமு 2500ன் முற்பகுதியில் இரண்டாம் மாரி இராச்சியத்தினர் மெசொப்பொத்தேமியாவின் தற்கால சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பகுதிகளை ஆட்சி செய்தனர். [5] [4][6] இரண்டாம் மாரி இராச்சியத்தின் தலைநகரமான மாரி நகரத்தை மறுசீரமைத்து இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில், ஆறடி அகலத்தில் உயரமான சுவர்களை எழுப்பினர். மேலும் சுவர்கள் மீது வில் வீரர்கள் காவலுக்கு நிற்க வைக்கப்பட்டிருந்தனர். [4][7][7][4]

Thumb
இரண்டாவது மாரி இராச்சிய மன்னர் இக்கு-சாமகன் சிற்பம், கிமு 25ம் நூற்றாண்டு

பின்னர் இப்பழைய நகரத்தை சீரான தெருக்களுடன் சீரமைத்து கட்டப்பட்ட புதிய நகரத்தில் கழிவு நீர் மற்றும் மழைநீர் வடிகால்களுடன் அமைக்கப்பட்டது. [4]

மாரி நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்ட அரண்மனை, கோயிலாகவும் செயல்பட்டது. [4]

மாரி நகரத்தின் தொல்லியல் களங்களை அகழாய்வு செய்த போது, கோயிலுக்கு செல்லும் வழியில் மூன்று இரட்டை மரத் தூண்கள், சிம்மாசன அறை மற்றும் ஒரு மண்டபம் கண்டெடுக்கப்பட்டது.[8] மேலும் ஆறு கோயில்களின் இடிபாடுகள் மாரி நகர தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது. [9] மேலும் மாரி நகரத்தில் சுமேரியக் கடவுள்களான இஷ்தர் மற்றும் உது தெய்வங்களின் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.[10]

செல்வாக்குடன் விளங்கிய இரண்டாம் மாரி நகர இராச்சியம், பண்டைய அண்மைக் கிழக்கில் அரசியல் மையமாக விளங்கியது.[5] மாரி இராச்சிய மன்னர்கள் லுகல் எனும் பட்டப் பெயரில் ஆட்சி செய்தனர்[11] எப்லா இராச்சியத்தின் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள், எப்லா இராச்சியத்தினர், மாரி இராச்சியத்தினருக்கு பரிசுகள் வழங்கியதை குறித்துள்ளது.[12]|group=note}}[13]

மாரி - எப்லா போர்

Thumb
மாரி இராச்சியத்தின் உருளை வடிவ சுடுமண் பலகையின் சிற்பங்கள் மற்றும் ஆப்பெழுத்துகள், கிமு 25ம் நூற்றாண்டு

மாரி இராச்சிய மன்னர் அன்சுத் என்பவர் எப்லா இராச்சியத்தின் மீது பல்லாண்டுகள் போரிட்டு, எப்லா நகரத்தைக் கைப்பற்றினார்.[14]

மன்னர் சாமு காலத்தில் ராஅக் மற்றும் நிரும் நகரங்களை கைப்பற்றினார். கிமு 24ம் நூற்றாண்டின் நடுவில், எப்லா இராச்சியத்தினர் வலிமை இழந்த காலத்தில், மாரி நகர இராச்சியத்தினருக்கு கப்பம் செலுத்தினர்.[15][16] மாரி இராச்சிய மன்னர் என்ன - தாகன், அண்டை நாட்டு எப்லாவிடம் திறை வசூலித்தான்;[16] பின்னர் அவனது மாரி நகர இராச்சியம், எல்பாவின் மன்னர் இர்கப் - தாமுவிடம் வீழ்ந்தது.[17][18]

எப்லாவிற்கும், வடக்கு மெசொப்பொத்தேமியா வழியாக தெற்கு பாபிலோன் நகரத்திற்கு செல்வதற்கான வணிகப்பாதைகளை, மாரி இராச்சியத்தினர் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அடைத்தனர். [19] இதனால் எல்பா மற்றும் சுமேரிய மன்னர்களின் கூட்டணிப்படைகள் ஒன்று சேர்ந்து கிமு 2300ல் மாரி இராச்சியப்படைகளை தோற்கடித்தது. [20][21]

மாரியின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மன்னர் இஸ்கியின் அரச முத்திரையில் போர்க் காட்சிகள், எப்லா நகரத்தின் அழிவுகள் குறித்து விளக்குகிறது.[22][23] கிமு 2300ன் நடுவில் எப்லா நகரத்தின் அழிவிற்கு பத்தாண்டுகளுக்குப்பின் மாரி நகரத்தை அக்காடியப் பேரரசர் சர்கோன் எரித்தார். [20] [24]

மூன்றாம் மாரி இராச்சியம்

Script error: The module returned a nil value. It is supposed to return an export table.

மாரி இராச்சியம் இரண்டு தலைமுறை காலத்திற்குள் சிதைந்து போனது. பின்னர் அக்க்காடிய மன்னர் மனிஷ்துசு என்பவர் மூன்றாம் மாரி இராச்சியத்தை கட்டமைத்தார்.[25] கிமு 2266ல் மாரி இராச்சியப் பகுதிகளை நிர்வகிப்பதற்கு, அக்காடியப் பேரரசர் சக்கநக்கு பட்டத்துடன் கூடிய ஒரு படைத்தலைவரை ஆளுநராக நியமித்தார்.[26] அக்காடியப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில், மாரி நகரத்தின் இராணுவ ஆளுநர் வம்சத்தினர் கிமு 19ம் நூற்றாண்டின் அரைப்பகுதி வரை மாரி இராச்சியத்தை தன்னாட்சியுடன் ஆண்டனர். மூன்றாம் மாரி இராச்சியத்தில் தற்கால சிரியா மற்றும் ஈராக் நாடுகள் அடங்கியிருந்தது.

Thumb
மாரி நகரத்தின் சிங்கச் சிற்பம், கிமு 22ம் நூற்றாண்டு

கிமு 1830ல் அமோரிட்டு மக்கள் மாரி இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர். மாரி தொல்லியல் களத்தில் கிடைத்த கல்வெட்டுகள், குறிப்புகளிலிருந்து அமோரிட்டு மக்களும், அக்காடிய ஆளுநர்களும் மாரி இராச்சியத்தின் பகுதிகளை ஆண்டதாக கருதப்படுகிறது. [27]|group=note}}[27]

சுப்ரும் பகுதியின் யாக்கிட்-லிம் எனும் ஆட்சியாளர் கிமு 1820ல் மாரி இராச்சியத்தில் ஆட்சி அமைத்தார். [note 1][29]

Thumb
மாரி இராச்சிய தேவதை, கிமு 18ம் நூற்றாண்டு

பின்னர் ஆட்சிக்கு வந்த யாதுன் - லிம் மாரி நகரத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பினார். மேலும் புதிய கோட்டைகள் நிறுவினார்.[30] மேற்கில் மத்தியதரைக் கடல் வரை மாரி இராச்சியத்தின் ஆட்சியை விரிவு படுத்தினார். [31][32]

அசிரிய மன்னர் முதலாம் சாம்சி-அதாத் கிமு 1798ல் மாரி இராச்சியத்தை கைப்பற்றினார்.[33][34] [35]

அசிரியர்கள் காலம்

அசிரியப் பேரரசர், மாரி இராச்சியத்தின் மன்னராக தனது மகன் யாஸ்மா - அதாத்தை நியமித்தார். மாரி இராச்சித்தின் பழைய மன்னர் யாதுன் - லிம்மின் மகளை அசிரியப் பேரரசர் மணந்தார்.[36][37]

Thumb
மன்னர் சிம்ரி - லிம்மின் முடிசூட்டு விழா, கிமு 18ம் நூற்றாண்டு
Thumb
மாரி இராச்சிய ஆளுநர் சமாஸ் - ரிசா - உசூர், கிமு 760

பாபிலோனை அழிக்க நினைத்த மாரி இராச்சியத்தை, பாபிலோனிய மன்னர் அம்முராபி கிமு 1759ல் அழித்தார். [38] இருப்பினும் மாரி இராச்சியம் ஒரு கிராமாக, பாபிலோனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. [38]

பின்னர் மாரி இராச்சியம் அசிரிய மன்னர் துகுல்தி - நினுர்தா ஆட்சியில் (கிமு 1243 - 1207) இருந்தது. [39] பின்னர் மாரி இராச்சியம் பாபிலோனியர்கள் மற்றும் அசிரியர்களின் கைகளுக்கு மாறியது.[39]

Remove ads

மாரி இராச்சிய ஆட்சியாளர்கள்

Thumb
மன்னர் இட்டின் - எல் தலையற்ற சிற்பம், கிமு 2090
Thumb
மாரி இராச்சிய மன்னர் புசூர் -இஷ்தரின் சிற்பம், (கிமு 2050)
Thumb
அக்காடிய பேரரசின் மாரி ஆளுநர் துரா தகானின் தலையற்ற சிற்பம் (கிமு 2071 -2051)
Thumb
மாரி நகர அக்காடிய ஆளுநர் யாதுன் - லிம் கல்வெட்டுக்கள், ஆண்டு கிமு 1820–1798

மாரி நகர இராச்சியத்தை கிமு 2500 முதல் கிமு 1761 முடிய ஆண்ட பல்வேறு வம்ச மன்னர்களின் பட்டியல்:

மேலதிகத் தகவல்கள் ஆட்சியாளர், ஆட்சிக் காலம் ...
Remove ads

பண்பாடு மற்றும் சமயம்

Thumb
அமோரிட்டு பெண், கிமு 25ம் நூற்றாண்டு

மாரி இராச்சியத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் இராச்சிய ஆட்சியில் தெற்கு சுமேரியா நாகரீகத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.[70]. மாரி இராச்சியம் ஒரு நகர இராச்சியமாக விளங்கியது.[71] மாரி நகர மக்களின் முடி அழகு மற்றும் உடைகளால் நன்கு அறியப்படுகிறார்கள். [72][73] மாரி இராச்சியத்தினர் 12 மாதங்கள் கொண்ட சூரிய நாட்காட்டி அறிமுகப்படுத்தினர். இதனையே எப்லா இராச்சித்தினரும் கடைபிடித்தனர். [74][75] மாரி இராச்சியத்தினர் தங்களது குறிப்புகள் சுமேரிய மொழியில் எழுதியுனர். கலை மற்றும் கட்டிடங்களும் சுமேரிய பாணியில் அமைத்தனர்.[76]

மாரி இராச்சியத்தில் அமோரிட்டு மக்கள் குடியேறிய பின் [77], மெசொப்பொத்தேமியாவின் பாபிலோனிய நாகரீகத்தின் ஆப்பெழுத்து முறை கையாளப்பட்டது.[78]

மாரி இராச்சியத்தில் பெண்கள், ஆண்களுக்கு நிகராக உரிமைகளை அனுபவித்தனர்.[79] மன்னர் வெளிநாட்டிற்கு சென்றிருந்த போது, மாரி இராச்சிய ராணி சிப்தி, தன் கணவரின் பெயரால் நாடாண்டார். [80]

சுமேரிய மற்றும் செமிடிக் மக்களின் பல்தெய்வ வழிபாட்டை மாரி மக்களும் கொண்டிருந்தனர்.[81] [82] இருப்பினும் மெர் எனும் காவல்தெய்வத்தை முதன்மைக் கடவுளாக வணங்கினர்.[1] வீட்டின் செழிப்பிற்கு பெண் தெய்வமாக இஷ்தர் மற்றும் ஆதாத் கடவள்களை வணங்கினர்,[81] அத்தர் [83] மற்றும் அனைத்தும் அறிந்த, அனைத்தும் பார்கின்ற உது (சமாஸ்) எனும் சூரியக் கடவுளை வணங்கினர். [84][85][81] [86] மேலும் என்கி, அனு மற்றும் என்லில் போன்ற தெய்வஙகளை வணங்கினர்.[87] மாரி இராச்சிய மக்கள் கோயில் பூசாரிகளிடம் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.[88] சமயச் சடங்களில் மன்னர்களும், அரச குடும்பத்தினரும் பங்கு கொண்டனர்.[89]

Remove ads

அகழாய்வுகளும், ஆவணக் காப்பகங்களும்

Thumb
மாரி தொல்லியல் களத்தின் அரண்மனைச் சுவர்களின் பகுதிகள்

தற்கால சிரியா - ஈராக் நாடுகளின் பகுதிகளைக் கொண்ட பண்டைய மாரி நகரத்தில் 1933ம் ஆண்டில் அகழாய்வு செய்யப்பட்டது. [90] இப்பகுதியில் ஒரு பழங்குடி மனிதன், மேட்டை தோண்டிய போது, தலையற்ற சிற்பம் கண்டெடுத்தார்.[90] இச்செய்தி அறிந்த பிரான்சு நாட்டு தொல்லியல் அறிஞர்கள், 14 டிசம்பர் 1933 அன்று மாரி நகரத்தில் தங்கி, அகழாய்வு பணிகள் மேற்கொண்டனர். அகழாய்வின் போது பண்டைய இஷ்தர் கோயிலின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதியை முழுமையாக அகழாய்வுகள் மேற்கொண்டனர்.

மாரி நகர தொல்லியல் களத்தில் கிபி 1993ல் அகழாய்வு செய்கையில் 300 அறைகளுடன் கூடிய சிம்ரிலிம் எனும் மன்னரின் பெரிய அரண்மனை கண்டெடுக்கப்பட்டது. இவ்வரண்மனையை பாபிலோன் மன்னர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டில் கைப்பற்றி அழித்தார்.

மாரி தொல்லியல் களத்தில் அகழாய்வு செய்த போது, முதலில் அக்காதியம் மொழியில் ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட 25,000 சுடுமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டது.[91] [92] மாரி நகர தொல்லியல் களத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் தேசிய அருங்காட்சியகம், அலெப்போ, (சிரியா), [93], பிரான்சு நாட்டின் இலூவா அருங்காட்சியகம் [94] மற்றும் தேசிய அருங்காட்சியகம் திமிஷ்கு, (சிரியா)வில் [85] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

1933 - 1939, 1951-1956 மற்றும் 1960 ஆண்டுகளில் மாரி நகரத்தின் தொல்லியல் அகழாய்வுகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது [95] முதலில் ஆண்ட்ரே பாரேட் 1974 முடிய 21 முறை அகழாய்வுகள் மேற்கொண்டார். [96] பின்னர் ஜீன் கிளௌட் மர்குரேன் (1979_2004)[97] மற்றும் பஸ்கல் பட்டலின் 2005ல் மீண்டும் அகழாய்வுகள் மேற்கொண்டார்.[95] மாரி தொல்லியல் களம் தொடர்பான இதழ் 1982 முதல் வெளியிடப்பட்டது. [98][99]

மாரி நகர களிமண் பலகைகள்

மாரி இராச்சியத்தில் களிமண் பலகைகளில் அக்காதிய மொழியில் [100] எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் மாரி இராச்சிய வரலாறு, மக்களின் பண்பாடு, நாகரீகம் பழக்க வழக்கங்கள் அறிந்து கொள்ள முடிகிறது.[101] இந்நகரத்தின் தொல்லியல் களத்தில் கண்டெடுத்த 3,000 களிமண் பலகை கடிதங்கள் மூலம் மாரி நாட்டின் நிர்வாகம், நீதித் துறை, பொருளாதாரம் குறித்தான செய்திகள் அறிய முடிகிறது. [102] மாரி நகர தொல்லியல் களத்தில் கிடைத்த செங்கற் பலகை ஆவனங்கள் கிமு 1800 - 1750 காலத்தவையாகும்.[102]

Remove ads

மாரி தொல்லியல் களத்தின் தற்போதைய நிலை

2011ம் ஆண்டில் துவங்கிய சிரிய உள்நாட்டுப் போரின் விளைவாக, பண்டைய மாரி நகர தொல்லியல் களத்தில் இருந்த அரச குடும்பத்தினரின் அரண்மனைகள், பொதுக்குளியல் அறைகள், இஷ்தர் மற்றும் தகான் கோயில்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் வெடி குண்டுகள் வைத்து தரைமட்டமாக்கப்பட்டது.[103]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads