கி. துரைராஜசிங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம் ('Krishnapillai Thurairajasingam, பிறப்பு: 28 சூலை 1956)[1] இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாண அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
Remove ads
அரசியலில்
வழக்கறிஞராகப் பணி புரியும் துரைராஜசிங்கம்[2][3] 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] பின்னர் 2012 மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[5][6][7][8]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து 2014 செப்டம்பரில் கட்சியின் பொதுச் செயலாளராக துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டார்.[9][10] 2015 அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிறுபான்மைக் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்ததை அடுத்து, அங்கு புதிய அர்சு பதவியேற்றது.[11][12][13] துரைராஜசிங்கம் கிழக்கு மாகாணத்தின் விவசாய கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ முன்னிலையில் 2015 மார்ச் 3 இல் பதவியேற்றார்.[14][15]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads