குடைமிளகாய்

From Wikipedia, the free encyclopedia

குடைமிளகாய்
Remove ads

குடைமிளகாய் என்பது பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்று. குடைமிளகாய்ச் செடியின் செடியியல் பெயர் காப்சிக்கம் ஆன்னம் (Capsicum annuum).[1][2] பல நிறங்களில் காய்க்கும் செடி வகைகளை உருவாக்கிப் பயிரிடுகிறார்கள். குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறங்கள் பரவலாக காணப்படுகின்றன. குடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, நடு அமெரிக்கா தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளைவது. குடைமிளகாய்ச் செடியின் விதைகளைப் பின்னர் 1493 இல் எசுப்பானியாவுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பரவியது.சேர்ந்தது. உலகில் அதிகமாக குடைமிளகாய் பயிரிடும் நாடுகளின் இன்றும் மெக்சிக்கோ முன்னணி நாடுகளுள் ஒன்றாக உள்ளது.

விரைவான உண்மைகள் குடைமிளகாய் Bell pepper, உயிரியல் வகைப்பாடு ...
விரைவான உண்மைகள்
Remove ads

சொல்லாட்சி

காப்சிக்கம் ஆன்னம் என்னும் செடியை அமெரிக்கரகள் பெல் பெப்பர் ("bell pepper") பெயரிட்டு வழங்குகிறார்கள். இதில் உள்ள பெப்பர் (மிளகு) பொருத்தமில்லாத பெயர். கிறித்தோபர் கொலம்பசு இச்செடியை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்திய பொழுது பொருத்தமில்லாத மிளகு என்னும் பொருள் கொண்ட எசுப்பானியச் சொல்லாகிய பிமியெண்ட்டோ (pimiento) என்பதால் அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் குடைமிளகாய்க்குத் தொடர்பில்லாத கறுப்பு மிளகு (பைப்பர் நைகுரம், Piper nigrum) மிகவும் விலைமதிப்பு மிக்கதாய் இருந்தது.

விரைவான உண்மைகள் உணவாற்றல், கார்போவைதரேட்டு ...
Remove ads

படக் காட்சி வரிசை

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads