குவைத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவைத் (Kuwait, அரபி: دولة الكويت), அதிகாரபூர்வமாக குவைத் நாடு (State of Kuwait) என்பது தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 4 மில்லியன்கள் ஆகும்.[3]
18ம், 19ம் நூற்றாண்டுகளில், குவைத் செல்வம் கொழிக்கும் ஒரு வணிக நாடாக இருந்தது.[4][5][6] பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டதை அடுத்து குவைத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.[7] முதல் உலகப் போர்க் காலத்தில், உதுமானியப் பேரரசை குவைத் மன்னர் ஆதரித்ததை அடுத்து பிரித்தானியப் பேரரசு பொருளாதாரத் தடை விதித்தது.[8][9] 1919-20 இல் இடம்பெற்ற குவைத்-நஜித் போரை அடுத்து, சவூதி அரேபியா 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது.[7] 1990 இல், குவைத் மீது ஈராக் படையெடுத்து தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டை அடுத்து குவைத் விடுவிக்கப்பட்டது.[10]
Remove ads
குவைத் வரலாறு
1899முதல்1961ல் சுதந்திரம் அடைந்த வரை குவைத்தை ஆளும் அல்சபா வம்சத்திற்காக வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை பிரிட்டன் மேற்கொண்டது. 2ஆகஸ்ட் 1990அன்று குவைத் ஈராக்கால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
பல வாரங்கள் நடந்த வான்வழி குண்டுவீச்சைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கூட்டணி 1991ஆம் ஆண்டு பிப்ரவரி23அன்று தரையில் தாக்குதலை தொடங்கியதால் நான்கு நாட்களில் குவைத் விடுவிக்கப்பட்டது.
1990 -91போது சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய குவைத் $5பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை செலவு செய்தது.
அல்சபா குடும்பம் 1991ல் ஆட்சிக்கு திரும்பிய பின்னர் மக்களாட்சி சட்டமன்றத்தை மீண்டும் நிறுவியது. அண்மைய ஆண்டுகளில் அது மேலும் உறுதியானதாகியது. மே 2009ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் அரபு தேசிய சட்டமன்றத்தில் நான்கு பெண்கள் இடம்பெற்றனர்.
2010-11ல் அரபியா முழுவதும் நடந்த எழுச்சிகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், பிதூன் எனப்படும் அரேபிய பூர்வீகம் அற்றவர்கள், 2011ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குடியுரிமை, வேலைகள், மற்றும் குவைத் குடிமக்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகள் ஆகியவற்றைக் கோரி சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் இளைஞர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் ஆளும் குடும்பத்தில் உள்ள பிரதம மந்திரி போட்டியாளர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிரதம மந்திரி மற்றும் அவரது அமைச்சரவையை வெளியேற்றவும் 2011ல் மீண்டும் மீண்டும் அணி திரண்டனர்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 2011ன் இறுதியில் பிரதமரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினர். தேர்தல் சட்டம் அமீரின் மாற்றங்கள் மூலம் ஒரு நபருக்கான வாக்குகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்ட்தால், 2012அக்டோபர் முதல் டிசம்பர் வரை குவைத் முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்புக்களை கண்டது.
சன்னி இஸ்லாமியர்கள், பழங்குடியினர், சில தாராளவாதிகள், மற்றும் எண்ணற்ற இளைஞர்கள் குழுக்களின் கூட்டணி தலைமையிலான எதிர்க்கட்சி டிசம்பர் 2012சட்டமன்ற தேர்தலைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக ஷியா வேட்பாளர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணிக்கையிலான இடங்களை வென்றனர்.
2006ல் இருந்து, ஐந்து சந்தர்ப்பங்களில் தேசிய சட்டமன்றம் அமீரால் கலைக்கப்பட்டு (ஜூன் 2012ல் ஒரு முறை அரசியலமைப்பு நீதிமன்றம், சட்டமன்றத்தை இரத்து செய்த்து) மற்றும் அமைச்சரவை 12முறை மாற்றியமைக்கப்பட்டது. வழக்கமாக இது சட்டமன்றம் மற்றும் அரசுக்கு இடையேயான அரசியல் தேக்கம் மற்றும் இடையூறுகளின் காரணமாக இருக்கும்.
Remove ads
குவைத் நாட்டு தமிழர் அமைப்புகள்
குவைத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் நடுபகுதியில் இருந்தே பல்வேறு தொழில் வாய்ப்புகளின் காரணமாக தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள தமிழர் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தமிழர் அமைப்புகள்
- குவைத் தமிழ் சங்கம் பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம்
- குவைத் தமிழோசை
- தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை
- குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் பரணிடப்பட்டது 2014-09-12 at the வந்தவழி இயந்திரம்
- இஸ்லாமிய தஃவா சென்டர்
- தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் பரணிடப்பட்டது 2017-06-28 at the வந்தவழி இயந்திரம்
- மஜ்லிஸ் இஹ்யாவுஸ் சுன்னா குவைத் பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம்
- பிரண்ட் லைனர் பரணிடப்பட்டது 2019-05-19 at the வந்தவழி இயந்திரம்
- இக்ரா இஸ்லாமிய சங்கம் பரணிடப்பட்டது 2017-06-19 at the வந்தவழி இயந்திரம்
- குவைத் தமிழர் சமூகநீதி பேரவை
- குவைத் தமிழ்நாடு பொறியாளர் மன்றம்
- குவைத் தவ்ஹீத் ஜமாத் பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம்
- தூய யோவான் தென்னிந்திய திருச்சபை குவைத்
- மாவீரன் அழகுமுத்து கோன் பேரவை குவைத்
- தேசம் குவைத்
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads