கே. நட்வர் சிங்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

கே. நட்வர் சிங்
Remove ads

கே. நட்வர் சிங் (Kunwar Natwar Singh, 16 மே 1929 – 10 ஆகத்து 2024)[1] இந்திய அரசியல்வாதி, நடுவணரசு அமைச்சர், நூலாசிரியர் என அறியப் படுகிறார். அயலகத் துறையில் அதிகாரியாக 31 ஆண்டுகள் பணிசெய்துவிட்டு அரசியலுக்கு வந்தார்.

விரைவான உண்மைகள் கே. நட்வர் சிங்K. Natwar Singh, வெளியுறவுத் துறை அமைச்சர் ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

1984 இல் காங்கிரசில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நட்வர் சிங், இராசசுத்தான் பரத்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1985 இல் இராசீவ் காந்தி தலைமையில் இரும்பு, நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஆனார். 1986-89 ஆண்டுகளில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். கே.நட்வர் சிங் 1989 இல் மதுரா தொகுதியிலிருந்து போட்டியிட்டுத் தோற்றார். 1998 இல் பரத்பூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நரசிம்மராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அர்ஜுன் சிங், நா. த. திவாரி ஆகியோருடன் இணைந்து அனைத்திந்திய இந்திரா காங்கிரசு என்னும் பெயரில் புதிய கட்சியைத் தோற்றுவித்தார்.

2002இல் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். ஊழல் புகாரை முன்னிட்டு அவர் நீக்கப்பட்டார்.

2008 இல் நட்வர் சிங் தம் மகனுடன் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். அந்த ஆண்டிலேயே கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.

Remove ads

எழுதிய நூல்கள்

  • Maharaja Suraj Mal 1707-63 His Life and Times
  • My China Diary 1956-88
  • Walking with Lions
  • Curtain Raisers :Essays Reviews and letters
  • One life is not enough (Autobiography)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads