யஷ்வந்த் சின்கா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

யஷ்வந்த் சின்கா
Remove ads

யஷ்வந்த் சின்கா (Yashwant Sinha) (பிறப்பு: நவம்பர் 6, 1937, பாட்னா[1]) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய நிதியமைச்சராக 1990 முதல் 1991 வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையிலும், மார்ச் 1998 முதல் சூலை 2002 வரை பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் பொறுப்பு வகித்தவர்.[2] மேலும் வெளியுறவு அமைச்சர் ஆக (சூலை 2002 - மே 2004)[3] அடல் பிகாரி வாஜ்பாய் இன் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார். தற்பொழுது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கின்றார்.[4] இவரது மகன் ஜெயந்த் சின்ஹா 16 மற்றும் 17வது மக்களவை உறுப்பினர் ஆவார். ஓற்றுமித்த எதிர்க்கட்சிளின் சார்பில் 2022 குடியரசு தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டார்.

விரைவான உண்மைகள் யஷ்வந்த் சின்கா, இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ...
Remove ads

இந்திய ஆட்சிப் பணி

இவர் இந்திய ஆட்சிப் பணியில் 1960 முதல் 1984 வரை இருந்து விருப்பஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக 1989 மற்றும் 2004 ல் இருமுறையும், மக்களவை உறுப்பினராக சார்க்கண்ட் மாநிலம் ஹஜாரியாபாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 1998,1999 மற்றும் 2009 ல் மூன்று முறையும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads