கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Kota Damansara MRT Station அல்லது Kota Damasnara – Thomson Hospital Station; மலாய்: Stesen MRT Kota Damansara) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, குவாசா டாமன்சாரா நகர்ப்பகுதியில்; எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும்.[1]
இதற்கு முன்னர் காஜாங் வழித்தடம் என்பது சுங்கை பூலோ-காஜாங் எம்ஆர்டி வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ், இந்த நிலையம் திசம்பர் 16, 2016 அன்று திறக்கப்பட்டது.[2]
இந்த நிலையம் கோத்தா டாமன்சாரா நகர்ப்பகுதியில் செகி பல்கலைக்கழகம் (SEGi University and Colleges) மற்றும் தாம்சன் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது.
Remove ads
நிலைய அம்சங்கள்
கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள அனைத்து உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போல ஒரு நிலையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நிலையம் பெர்சியாரான் சூரியன் சாலைக்க்கு (Persiaran Surian) மேலே கட்டப்பட்டுள்ளது.
நிலைய அமைவிடம்
கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் என்பது கோத்தா டாமன்சாராவின் PJU5 பகுதியில்; கோத்தா டாமன்சாரா சாலைக்கும் டெக்னோலாஜி சாலைக்கும் (Jalan Teknologi) இடையிலான சந்திப்புக்கு அருகில், பெர்சியாரான் சூரியனுக்கு மேலே அமைந்துள்ளது.
இந்த நிலையத்திற்கு அருகிலுள்ள பிரபலமான அடையாளங்களில் திராபிகானா மருத்துவ மையம் (Tropicana Medical Centre), செகி பல்கலைக்கழகம், ஸ்ரீ கேடீயூ பள்ளி மற்றும் குகுசான் மெலாத்தி (Gugusan Melati) அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை அடங்கும். கோத்தா டேம் (Kota Dame) (முன்னர் கோத்தா டாமன்சாரா நகர்ப்பகுதி) இரவுச் சந்தையை இந்த நிலையத்திலிருந்து ஊட்டி பேருந்துக்ள் வழியாக அணுகலாம்.[3]
நிலைய அமைப்பு
L2 | நடைமேடை தளம் | பக்க நடைமேடை |
நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் KG35 (→) | ||
நடைமேடை 2 9 காஜாங் (←) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
பக்க நடைமேடை | ||
L1 | இணைப்புவழி | கட்டணப் பகுதிக்கான நுழைவாயிகள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள் |
G | தரை தளம் | பேருந்து முனையம், வாடகை கார்கள் நிறுத்துமிடம், பணியாளர்கள் வாகனங்கள் நிறுத்துமிஎடம் |
Remove ads
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
பெர்சியாரான் சூரியன் சாலையின் இருபுறமும் அமைந்துள்ள இந்த நிலையத்தில் நுழைவாயில் A மற்றும் நுழைவாயில் B என இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. பெர்சியாரான் சூரியன் சாலைக்கு இணையாக இயங்கும் சாமார் சாலை 4/5-இல் (Jalan Camar 4/5) இருந்தும் நுழைவாயில் B-ஐ அணுகலாம்.
பெர்சியாரான் சூரியன் சாலையில் உள்ள இரு நுழைவாயில்களிலும் பேருந்து முனையம், வாடகை கார்கள் நிறுத்துமிடம், பணியாளர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளன.
Remove ads
பேருந்து சேவைகள்
பிற பேருந்துகள்
காட்சியகம்
கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2016 - 2025):
- பெர்சியாரான் சூரியன் நிலையப் பலகை.
- நுழைவாயில் A-இல் இருந்து நிலையத்தின் காட்சி
- நுழைவாயில் B-இல் இருந்து நிலையத்தின் காட்சி
- நுழைவாயில் A நகரும் படிக்கட்டுகள்
- நுழைவாயில் A
- நுழைவாயில் B நகரும் படிக்கட்டுகள்
- நுழைவாயில் B பேருந்து நிறுத்தம்
- பின்னணியில் செகி பல்கலைக்கழகம்
- குவாசா டாமன்சாராவிற்குச் செல்லும் தளத்தின் காட்சி
- காஜாங்கிற்குச் செல்லும் தளம்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads