கோவாவின் கதம்பர்கள்

கி.பி. 960 முதல் 1310 வரை கோவாவை ஆண்ட ஒரு வம்சம் From Wikipedia, the free encyclopedia

கோவாவின் கதம்பர்கள்
Remove ads

கோவாவின் கதம்பர்கள் (Kadambas of Goa) இந்திய துணைக் கண்டத்தில் ஒரு வம்சமாக இருந்தனர். இவர்கள் மராத்தியர்களின் கதம் குலத்தைச் சேர்ந்தவர்கள்.[1][2][3] இவர்கள் கிபி 10ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை கோவாவை ஆட்சி செய்தார்கள். இவர்கள் சிலகாரர்களின் பகுதிகளைக் கைப்பற்றி முதலில் சந்தோரிலிருந்து ஆட்சி செய்தனர். பின்னர் கோபக்கபட்டனத்தை தங்கள் தலைநகராக மாற்றினர்.[4][5][6]

விரைவான உண்மைகள் கோவாவின் கதம்பர்கள், தலைநகரம் ...
Thumb
ஹங்கல்
ஹங்கல்
கோவா
கோவா
ஹலாசி
ஹலாசி
ஹங்கல்
ஹங்கல்
கோவாவை ஆண்ட கதம்பர்களின் ஆட்சிப் பகுதி
Remove ads

தோற்றம்

கருநாடகாவின் சிமோகாவில் கண்டுபிடிக்கப்பட்ட தலகுந்தா கல்வெட்டின் படி, கதம்பர் வம்சத்தின் மயூரசர்மாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது.[7]

தனி வம்சத்தை நிறுவுதல்

மேலைச் சாளுக்கியர்களின் நிலப்பிரபுவான, கதம்ப சாஸ்ததேவன் கோவாவின் மகாமண்டலேசுவரராக சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலப்பன் என்பவரால் நியமிக்கப்பட்டார். சவாய் வரே கல்வெட்டின் படி, கதம்பர்கள் சாளுக்கியர்களின் கூட்டாளிகளாக இருந்தனர் எனத் தெரிகிறகிறது. இவர்கள் இராட்டிரகூடர்களை தோற்கடிக்க சாளுக்கியர்களுகு உதவினர். சாஸ்ததேவன் பின்னர் சந்திரபூர் நகரத்தை சிலகாரர்களிடமிருந்து கைப்பற்றி கிபி 960 இல் கோவாவில் கதம்ப வம்சத்தை நிறுவினார்.[8]

Remove ads

கோபக்கபட்டனம்

சாஸ்ததேவன், கோவா, கோபகப்பட்டனம் துறைமுகம் மற்றும் கபர்திகாட்விப்பா ஆகியவற்றைக் கைப்பற்றி, தெற்கு கொங்கணின் பெரும்பகுதியை தனது இராச்சியத்துடன் இணைத்து, கோபகப்பட்டினத்தை தனது துணை தலைநகரமாக மாற்றினார். அடுத்த மன்னர் முதலாம் ஜெயகேசி கோவா இராச்சியத்தை மேலும் விரிவுபடுத்தினார். துவயாஷ்ராயா என்ற சமண நூல் இவனது தலைநகரத்தின் விரிவாக்கம் பற்றியும், கோபக்கப்பட்டினம் துறைமுகம், சான்சிபார், வங்காளம்,குசராத்து மற்றும் இலங்கை ஆகியவற்றுடன் வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தது என்றும் குறிப்பிடுகிறது. கோபாகப்பட்டனம் ஒரு வணிக நகரமாக இருந்தது. மேலும், இது பழைய கோவாவுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக மையமாக இருந்தது. 1320களில் இது கில்ஜியின் தளபதி மாலிக் கபூர் இந்த நகரைத் தாக்கி கொள்ளையடித்தான். இதனால் கதம்பர்கள் சந்தோருக்குத் தப்பித்தனர். ஆனால் முகமது பின் துக்ளக் சந்தோரை வென்றபோது கோபக்கபட்டனத்திற்குத் திரும்பினர்.[9]

Thumb
கோவாவின் கதம்ப வம்சத்தைச் சேர்ந்த நாணயம், சுமார் 1240-1310 கிபி.

நிர்வாகம்

கதம்பர்களின் ஆட்சியின் போது, ‘கோபுரி’ என்கிற கோவா பெயரும் புகழும் உச்சத்தை எட்டியது. கோவாவின் மதம், கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் கலைகள் செழித்து வளர்ந்தன. மேலும் வம்சம் பல சிவன் கோயில்களைக் கட்டியது. இவர்கள் ‘கொங்கனாதிபதி’, ‘சப்தகோடீச லட்பா வரவீர’, ‘கோபக்கபுரா வரதீஷ்வா’, ‘கொங்கன்மகாச்சாரவர்த்தி’ மற்றும் ‘பஞ்சமகாசப்தா’ போன்ற பட்டங்களை வைத்துக்கொண்டனர்.[10] இவர்கள் சௌராட்டிர அரச குடும்பத்திலும் உள்ளூர் தலைவர்களின் குடும்பத்திலும் கூட திருமணம் செய்து கொண்டனர். மன்னர்கள் பண்டைய வேத சமயத்தை ஆதரித்தனர். அசுவமேத யாகம் போன்ற வேள்விகளைசெய்தனர். இவர்கள் இந்து சமயத்தை பிரபலப்படுத்தினர். மேலும், சமணத்தையும் ஆதரித்தனர்.

கதர்பர்கள் சமசுகிருதம் மற்றும் கன்னடத்தில் நிர்வாகம் செய்தனர். இவர்கள் கன்னட மொழியை கோவாவுக்கு அறிமுகப்படுத்தினர். அங்கு அது உள்ளூர் மொழியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நாகரி, கதம்பம், அலேகன்னடம் மற்றும் கோய்கன்னடி எழுத்துக்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. திரிபுவனமல்லன் என்ற அரசன் கோபக்காவில் ‘பிரம்மபுரி’ என்ற நகரத்தை நிறுவினார் என்பது மற்றொரு கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. வேதம், சோதிடம், மெய்யியல், மருத்துவம் மற்றும் பிற பாடங்கள் பிரம்மபுரியில் பிராமணர்களால் கற்பிக்கப்பட்டது.[11] இவ்வகையானக் கல்விக்கூடங்கள் கோவா, சவோய் வெரெம், கௌலி மௌலா போன்ற பிற இடங்களிலும் காணப்பட்டன.

கதம்பர்கள், கிபி 1345 வரை [12][13] 400 ஆண்டுகளுக்கும் மேலாக கோவாவை ஆட்சி செய்தார்.[14]

Thumb
கோவாவின் கதம்பர்களின் அரச சின்னம்
Remove ads

அரசின் சின்னம்

கோவா அரசுக்குச் சொந்தமான பேருந்து சேவை கதம்ப வம்சத்தின் பெயரால் ‘கதம்ப போக்குவரத்துக் கழகம்’ என்று அழைக்கப்படுகிறது. கதம்பர்களின் அரச சின்னமான சிங்க உருவம் பேருந்துகளில் ஒரு சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1980 ஆம் ஆண்டில் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இச்சின்னம் பயன்படுத்தப்படுகிறது.[15]

2005 மே 31 அன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணப் முகர்ஜி கார்வாரில் ‘ஐஎன்எஸ் கதம்பா’ என்ற கடற்படைத் தளத்தைத் தொடங்கி வைத்தார்.[16]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads