பாக்டிகா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

பாக்டிகா மாகாணம்map
Remove ads

பாக்டிகா (Paktika (பஷ்தூ: پکتیکا) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணமானது முன்பு லியோ பாக்டியா என அழைக்கப்படும் பகுதியைச் சேர்ந்த‍தாக இருந்த‍து. இந்த மாகாணம் கிட்டத்தட்ட 413,800 மக்கட்தொகையைக் கொண்டதாக உள்ளது. மாகாணத்தில் பெரும்பான்மை இனத்தவர் பஷ்தூன் மக்கள் ஆவர். ஷாரானா நகரம் மாகாண தலைநகரமாக உள்ளது. அதே சமயம் மிகுதியான மக்கள்தொகை உள்ள நகரமாக உர்கன் நகரம் உள்ளது.

விரைவான உண்மைகள் பாக்டிகாPaktika پکتیکا, நாடு ...
Remove ads

நிலவியல்

பாக்டிகா மாகாணமானது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியான துராந்து எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதன் வடக்கில் கோஸ்ட் மாகாணம் மற்றும் பக்டியா மாகாணங்களும், மேற்கில் கஜினி மாகாணம் மற்றும் சாபுள் மாகாணங்களும், கிழக்கில் பாக்கித்தானின் தெற்கு வசீரிஸ்தான் மற்றும் வடக்கு வசீரிஸ்தான் பகுதிகளும், பலூச்சிஸ்தான் மாகாணத்தின் சாப் மாவட்டமானது தென்கிழக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளைப் போலவே, பாக்டிகா மாகாணத்தில் கடுமையாக காடழிப்பு நடந்து வருகிறது. அண்மைய ஆண்டுகளில் பேரழிவு தந்த வெள்ளப் பெருக்குக்கான காரணம் இதுதான். இந்த மாகாணமானது முதன்மையாக மலைப்பகுதிகளோடு, பருவகால ஆற்றுப் பள்ளத்தாக்குகளைக் கொண்டதாக உள்ளது. மாகாணத்தின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள நிலப்பரப்பானது உயர்ந்தும், மிகக் கரடுமுரடானதாகவும் உள்ளது. மேற்கில், உள்ள ஓம்னா மாவட்டத்தின் மலைப்பகுதியில் ரவுட்-இ லுரா ஆறு உருவாகி, கஜினி மாகாணத்திற்கு தெற்கே பாய்ந்து, ஜர்குன் ஷார், ஜானி கெல், டிலா மாவட்டங்களில் நிலப்பகுதியில் பாய்ந்து ஆழமற்ற ஆற்றுப் பள்ளத்தாக்கை உருவாக்குகிறது. பாக்கிஸ்தானுக்கு அருகில் ஓம்னா பகுதியில் உள்ள நிலப்பரப்பு மிக அதிகமான மலைப்பகுதியாகும்.

பருவகாலத்தைப் பொறுத்து மாறுபட்டு ஓடக்கூடியதான கோமல் ஆறானது, சாரா ஹாஸா மாவட்டத்தின் மலைகளில் தோன்றி தெற்கு நோக்கி பாய்கிறது. இது தென்கிழக்கு பாகிஸ்தான் எல்லையை நோக்கி செல்லும் முன், கோமால் மாவட்டத்தின் நிலப்பகுதியை வளமாக்கி செல்கிறது. பாக்கிஸ்தானில் கிழக்கு நோக்கி ஓடிச்செல்லும் இந்த ஆறு இறுதியில் சிந்து நதியில் கலக்கிறது.

Remove ads

வரலாறு

பாக்டிகாவின் நிலப்பகுதியின் வரலாற்றுகால பகுதியானது பெரிய பாக்டியா (Pashto: لویه پکتیا, லியோ பாக்டியா) என அழக்கப்பட்டது. இந்த பெரிய பாக்டியாவுக்கு உட்பட்டதாக பாஸ்தியா மாகாணம், கோஸ்ட் மாகாணம் மற்றும் கஜினி மாகாணம் , லோகர் மாகாணங்களின் ஒரு பகுதியைக் கொண்டதாக இருந்தன. கிரேக்க வரலாற்று ஆசிரியரான எரோடோட்டசு இந்த பகுதியில் குடியேறிய பழங்குடியினரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார், கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தவரான இவர் இந்தப் பழங்குடிகளை "பாக்டீன்கள்" என அழைத்துள்ளார்.

1970களில், பாக்டிகாவின் தலைநகராக போதுமான அளவு வளர்ச்சியடையாத தொலைதூரத்தில் இருந்த‍த நகரான உர்கன் இருந்த‍து. இதனால் மாகாணத்தின் தலைநகரை காபூல், கஜினி, காந்தாரம் போன்ற பெரிய நகரங்களும் வணிக மையங்களுமான நகரங்களுடன் சாலை மார்கமாக இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் இருந்தத ஷாரானா நகரம் தலை நகராக ஆக்கப்பட்டது.

பாக்டிக்கா மாகாணமானது சோவியத்தின் ஆக்கிரமிப்பின் போது பல போர்களைக் கண்ட இடமாக இருந்த‍து.

1983 க்கும் 1984 க்கும் இடைப்பட்ட காலத்தில் உர்கன் முற்றுகை நடைபெற்றது.

Remove ads

அரசியலும், நிர்வாகமும்

Thumb
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க துணை தூதர் எர்ல் ஆண்டனி வெய்ன் உடன் 2010 ஆண்டு ஆளுநர் மொஹிபுல்லா சமிம்

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அமினுல்லா சாரிக் ஆவார்.[2] ஷாரானா நகரம் மாகாண தலைநகரமாக செயல்படுகிறது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) கையாள்கிறது. பாக்டிகா மாகாணத்தை ஒட்டியுள்ள பாக்கித்தானின், நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் எல்லையைப் பகுதியில் ஆப்கானிய தேசிய காவல்துறையின் (ஏஎன்பி) ஒரு பகுதியான ஆப்கானிய எல்லை பொலிசால் (ஏபிபீ) கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் தலிபான் கிளர்ச்சியாளர்களால் இந்த மாகாணத்தில் எல்லைப் பகுதி பயன்படுத்தப்படுகிறது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

சுலைமான்கால் பழங்குடியினர் சமூக கவுன்சிலானது ஆப்கானிஸ்தானின் காபூலில் அரசிடம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த சுலைமான்கால் பழங்குடிப் பேரவையானது ஆப்கானிஸ்தான் முழுவதும் பல மாகாண அலுவலகங்களைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் சுலைமான்கல் பழங்குடிப் பேரமைப்பின் தலைவராக அய்யூப் கல்கிகார் சுலைமான்கல் உள்ளார்.

ஹக்கானி நெட்வொர்க்கின் மூத்த தலைவரான சங்கேன் சத்ரன் பாக்டீடா மாகாணத்தின் தலிபானின் நிழல் ஆளுநர் ஆவார். 2013 செப்டம்பர் 5 அன்று அவர் அமெரிக்க ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் பிறகு இப்பதவிக்கு அவரது சகோதரர் பிலால் சத்ரன் நியமிக்கப்பட்டார்.[3]

போக்குவரத்து

2014 ஆம் ஆண்டு மே முதல், பாக்டிகா மாகாணத்தில் ஷாரானா வானூர்தி நிலையத்தில் இருந்து காபூலுக்கு பயணிகள் விமானம் இயக்க திட்டமிடப்பட்டது. இந்த மாகாணமானது வளர்ச்சியில் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் "பின்தங்கியது" எனக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாகாணத்தில் 157 கி.மீ சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், 2013 ஆண்டில் மட்டும் 70 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டது என்று மாகாண பொது வேலைத் துறைத் தலைவரான பொலிஸ் பொறியியலாளரான ஹபிசுல்லா தெரிவித்தார்..[4]

Thumb
உள்ளூர் ஆப்கான் சிறுவர்கள்
Thumb
ராபட் கிராமத்தில் இருந்து விரகு சுமையுடன் செல்லும் உள்ளூர் ஆப்கானியர்
Thumb
ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்.
Remove ads

மக்கள்வகைப்பாடு

பாக்டிகா மாகாணத்தின் மக்கள் தொகை 413,800 ஆகும்.[5] இது பல இன பழங்குடி மக்களைக் கொண்டது. கடற்படை முதுநிலை பட்டப்படிப்பு பள்ளியின் கூற்றின்படி, மாகாணத்தில் வாழும் இனக்குழுக்கள் பின்வருமாறு: பஷ்டூன், தாஜிக், அரபு, பபாய் மற்றும் பல சிறுபான்மை குழுக்கள் வாழ்கின்றனர்.[6] மற்ற தரவுகளின்படி மாகாணத்தின் மக்கள் தொகையில் பஷ்டூன் மக்கள் 96% உள்ளனர்.[7] சுமார் 15,000 மக்கள் (1.8%) உஸ்பேக்கியர், சுமார் 5,000 பேர் வேறு சில மொழிகளை பேசுகிறார்கள்.[7] அனேகமாக கசாரா மக்கள் அல்லது பலூச் மக்கள் சிறுபான்மையாக இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர்.[8][9][10] பாக்டிக்கா மக்கள்தொகையில் பெரும்பான்மையானோர் (சுமார் 99%) கிராமப்புற மாவட்டங்களில் வாழ்கின்றனர். தலைநகரான ஷாரானாவில் 54,400 பேர் வசிக்கின்றனர். பாக்டிக்காவின் பெரும்பாலான மாவட்டங்களில் 25,000 முதல் 55,000 வரையிலான மக்கள் வாழ்கின்றனர். நிகா மற்றும் டூரூ ஆகிய இரண்டு மாவட்டங்களில் 20,000 க்கும் குறைவாகவும் 15,000 க்கும் அதிகமான மக்களைக் கொண்டதாக உள்ளது.

பெரும்பாலான அனாப் பள்ளியைச் சேர்ந்த மக்கள் சுன்னி முஸ்லீம் மக்களாவர்.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads