சிங்கராஜா

இந்தோனேசியா, வடக்கு பாலியில் உள்ள ஒரு துறைமுக நகரம் From Wikipedia, the free encyclopedia

சிங்கராஜா
Remove ads

சிங்கராஜா (ஆங்கிலம்: Singaraja; இந்தோனேசியம்: Singaraja; பாலினியம்: ᬲᬶᬗᬭᬚ) என்பது இந்தோனேசியா, வடக்கு பாலியில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும்.[2] இந்தப் பெயர் சமசுகிருதம் Singha; Raja; என்பதற்கான இந்தோனேசியப் பெயராகும்.

விரைவான உண்மைகள் சிங்கராஜா Singaraja ᬲᬶᬗᬭᬚ Singhā-Āmbāra-Rāja, நாடு ...

இது லோவினா கடற்கரைக்கு கிழக்கே அமைந்துள்ளது. இது புலேலெங் மாவட்டத்தின் மையமாக உள்ளது. இதன் பரப்பளவு 46.94 கிமீ²; மற்றும் 2022-ஆம் ஆண்டில் 153,930 மக்கள் தொகையைக் கொண்டது.[1] இது பாலி தீவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.[3]

சிங்கராஜா நகரம், நெல் மற்றும் காப்பி உற்பத்திப் பொருட்களின் வணிக மையமாக விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் அருகிலுள்ள ஜாவாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கைவினைப் பொருட்களில் மணற்கல் செதுக்குதல்; நெசவு; கூடை, தொப்பி, பை மற்றும் விசிறி தயாரித்தல்; மற்றும் தோல் வேலைப்பாடு ஆகியவை அடங்கும்.

Remove ads

பொது

Thumb
அகமத் யானி தெரு

1849 முதல் 1960 வரை பாலி மற்றும் சிறு சுண்டா தீவுகளுக்கு இடச்சு குடியேற்றவியத்தின் தலைநகரமாக சிங்கராஜா இருந்தது. தெற்கில் புக்கிட் தீபகற்பம் வளர்ச்சி பெறும் வரையில் இந்த நகரம் ஒரு நிர்வாக மையமாகவும், பயணிகள் பெரும்பாலோர் வருகை தரும் துறைமுகமாகவும் இருந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களின் நிர்வாக மையமாகவும் சிங்கராஜா இருந்தது. இந்த நகரத்தில் கெடோங் கீர்த்தியா என்ற வரலாற்று நூலகம் உள்ளது. இதில் சுமார் 3,000 பாலினிய கையெழுத்துப் பிரதிகள் உள்ளன.[2][4]

சிங்கராஜாவிலிருந்து கிழக்கே 4 மைல் [7 கிமீ] தொலைவில் உள்ள சாங்சிட், தென்கிழக்கே சர்வான், கிழக்கே யே சானி ஆகிய இடங்கள் பழைய இந்து கோயில்களின் தளங்களாகும்.[2]

Remove ads

சுற்றுலாத் தலங்கள்

  • கீர்த்தியா கட்டிடம் (Gedong Kirtya) - (பனை ஓலை நூலகம்)
  • புலேலெங் துறைமுகம் (Pelabuhan Buleleng) - (இடச்சு காலத்திலிருந்து இயற்கை துறைமுகம்).
  • பெங்லாடன் கிராமம், புலேலெங், புலேலெங் (Penglatan, Buleleng, Buleleng) - (பாரம்பரிய உணவு தயாரிக்கும் மையம்: டோடோல் பாலி).
  • பெனிம்பங்கான் கடற்கரை (Pantai Penimbangan) - (பல்வேறு வகையான உணவகங்கள்; மற்றும் கடற்கரை சமையல் சுற்றுலாத் தலம்).
  • லோவினா கடற்கரை (Pantai Lovina) - (டால்பின்களை அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் காண ஓர் அழகான கடற்கரைச் சுற்றுலா தலம்).
  • பங் கர்னோ பூங்கா (Taman Bung Karno) - பங் கர்னோ பூங்கா; பசுமை திறந்தவெளி; (இது சிங்கராஜாவின் சுகசாடா கிராமத்தில் அமைந்துள்ளது)
Remove ads

காட்சியகம்

  • சிங்கராஜா காட்சிப் படங்கள்

இரட்டை நகரங்கள்

சிங்கராஜாவின் இரட்டை நகரங்கள்[5]

காலநிலை

சிங்கராஜாவில் வெப்பமண்டல சவன்னா காலநிலை (Aw) உள்ளது, சூன் முதல் அக்டோபர் வரை மழைப்பொழிவு குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கு. திசம்பர் முதல் மார்ச் வரை கனமழை பெய்யும். ஏப்ரல், மே மற்றும் நவம்பர் மாதங்களில் மிதமான மழை பெய்யும்.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், சிங்கராஜா, மாதம் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads