சில சமயங்களில் (திரைப்படம்)

பிரியதர்சன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சில சமயங்களில் (Sometimes) 2018இல் தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்சன். தயாரிப்பு ,ஐசரி கே. கணேஷ் , பிரபுதேவா, மற்றும் ஏ. எல். விஜய், இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், சிரேயா ரெட்டி, மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் தோன்றியிருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு சமீர் தாஹீர்.

விரைவான உண்மைகள் சம் டைம்ஸ், இயக்கம் ...

இந்தப் படம் நெற்ஃபிளிக்சில் 2018 மே 1 அன்று வெளியிடப்பட்டது. 74 வது கோல்டன் குளோப் விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும், ஆனால் விருதிற்கு பரிந்துரைக்கப்படவில்லை.[2]

Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

"தீ தனா தன்" படம் வெளியான 2009 டிசம்பருக்குப் பின் இயக்குநர் பிரியதர்சன் எயிட்சு என்ற படத்தில் இந்தி நடிகர் ஆமிர் கானுடன் பணியாற்றப் போவதாக அறிவித்தார்.[3] இந்த இணை கதையை பற்றி விவாதித்து திட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தது ,இயக்குநர் பிரியதர்சன் 2011 பிப்ரவரியில் தான் இன்னும் கதையை விரிவாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.[4] இருப்பினும், இயக்குநர் கதை விவாதத்தை முழுமையாக முடிக்க முடியாததால் மே 2012 ல், ஆமீர் கான் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோர் இந்த திட்டத்தை கைவிட்டனர்.[5] இயக்குநர் இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மறுபரிசீலனை செய்ய நினைத்தார், ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.[6]

2015 ஜூலையில் , பிரியதர்ஷன், அதற்கு பதிலாக தமிழ்த் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சிரேயா ரெட்டி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிப்பார்கள் என்று அறிவித்தார். சந்தோஷ் சிவன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், பீனா பால் மற்றும் சாபு சிரில் ஆகியோர் முறையே படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குநராக தேர்வு செய்யப்பட்டனர். தனது முன்னாள் உதவியாளரான இயக்குநர் ஏ. எல். விஜயின் "தி பிக் ஸ்டுடியோஸ்" 2 கோடி ரூபாய்க்கு இந்தத் திரைப்படத்தை எடுத்துத் தருவதாக ஒப்பந்தம் செய்தார். நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தாங்கள் பெற்றுவரும் ஊதியத்தை விடக் குறைவாகவே பெறுவார்கள் என்வும் அறிவிக்கப்பட்டது.[7] பிரபுதேவா பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைந்து இப்ப்டத்தை தயாரிப்பதாக அறிவித்தார். "திங் பிக் ஸ்டுடியோஸ்" படத்தின் முக்கிய தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார்கள்.[8] இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா பின்னணி இசையை மேற்கொண்டார்.[9] இந்த படத்தில் பாடல்கள் இல்லை தமிழ் சினிமாவுக்கு இது குறிப்பிடத்தக்க அரிதானதாகும்.[10][11]

ஆகஸ்ட் 2015 ல் பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்க "சில நேரங்களில்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.[12] இருபத்தி ஐந்து நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடைந்தது. தயாரிப்பு முடிவடைந்த பிறகு, "சில சமயங்களில்" என்ற பெயரில் இந்தப் படம் மீண்டும் பெயர் மாற்றப்பட்டதாக அமலா பால் அறிவித்தார்.[13] சர்வதேச பார்வையாளர்களுக்காக, இந்த திரைப்படம் "சம் டைம்ஸ்" என்ற தலைப்பில் இருந்தது.[14]

Remove ads

வெளியீடு

"சம் டைம்ஸ்" நெற்ஃபிளிக்சில் 2018 மே 1 அன்று வெளியானது. இத்திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படவில்லை.[1]

இதையும் பார்க்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads