சிவம் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

சிவம் (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

சிவம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மொழிமாற்றுத் தொடர் ஆகும். இத்தொடரானது 'தேவோன் கே தேவ்... மகாதேவ்' என்ற பெயரில் லைப் ஓகே தொலைக்காட்சியில் திசம்பர் 18, 2013 முதல் திசம்பர் 14, 2014 வரை ஒளிபரப்பாகி 820 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

விரைவான உண்மைகள் சிவம், வேறு பெயர் ...

2018 முதல் இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் சிவம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. ஸ்டார் பாரத் என்ற இந்தி தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 5, 2018 முதல் மறு ஒளிபரப்பு ஒளிபரப்பப்படுகின்றது.

Remove ads

கதை

சீசன் 1

சிவம் தொடரின் தொடக்கம் சிவபெருமான் சதியின் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. அண்ட சராசரங்களை படைத்தப் பின்பு, உலக உயிர்களை தோற்றுவிக்க பிரம்மா முயன்றார். எனினும் அவரால் சக்தியில்லாமல் இயலவில்லை. அதனால் சிவபெருமானிடமிருந்து சக்தியை பிரிக்க கடுந்தவம் புரிந்தார். தவத்தில் மகி்ழ்ந்த சிவபெருமான் தன்னில் பாதியாக இருந்த சக்தியை தனியே பிரித்தார். அதலிருந்து சக்தியும் சிவனும் தனித்தே இருந்தார்கள். மீண்டும் சக்தியை சிவனுடன் இணைக்க எண்ணம் கொண்ட திருமாலும் பிரம்மதேவனும் சக்தியை பிரஜாபதி தட்சனின் குமாரியாக பிறக்க வைத்தார்கள். தட்சன் தன் தந்தையான பிரம்மாவின் தலையை கொய்து, பூசை இல்லாமல் போக சாபமளித்த சிவபெருமான் மீது கோபம் கொண்டிருக்கிறார். அதனால் தன்னுடைய சாம்ராஜ்யத்தில் சிவபெருமான் வணங்குவதையும், அவரைப் பற்றி பெருமையாக பேசுவதையும் தடை செய்துள்ளார். தாட்சாயினி சிவபெருமான் என்றால் யார் என்றே அறியாமல் வளர்கிறார்.

ஒரு நாள் சிவபெருமானின் ருத்திராட்சம் தாட்சாயினி நீர் எடுக்க செல்லும் போது கண்ணில் படுகிறது. அதை கையில் எடுக்கும் தாட்சாயினியை அவரின் சகோதரிகள் எச்சரிக்கை செய்கின்றார்கள். அந்நிகழ்விலிருந்து சிவபெருமானை பல சம்பங்கள் மூலம் அறிகிறார். ததிசி முனிவர், மாதங்கி துணையுடன் சிவபெருமான் மீது தான் காதல் கொண்டிருப்பதை உணர்கிறார்.காதலை உணர்ந்த சதி தன் காதலை நடனத்தின் மூலம் வெளிப்படுத்தி சிவனை அழைக்கிறாள்.சிவனும் அழைப்பை ஏற்று வருகை தர இருவரும் இணைந்து அனைவரின் முன்னிலையிலும் நடனத்தின் மூலம் தங்களின் காதலை வெளிப்படுத்துகிறார்கள்.

Remove ads

நடிகர்கள்

Remove ads

விருதுகள்

மேலதிகத் தகவல்கள் வருடம், விருதுகள் நிகழ்வு ...

மொழிமாற்றம்

இத்தொடர் நாடகம் ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் கைலாசநாதன் என்ற பெயரில் மலையாளத்திலும், மா தொலைக்காட்சியில் ஹர ஹர மகாதேவா என்ற பெயரில் தெலுங்கிலும், பெங்காலி, ஓடியா, மராத்தி போன்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பட்டது.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads